தேர்வு எழுதாமல் இருப்பதற்காக 4 மாணவர்கள் தங்களது கையை முறித்துக்கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்புக்கு தேர்வு நடந்து வருகிறது. நேற்று பள்ளிக்கு வந்த 4 மாணவர்கள் கையில் கட்டுடன் வந்தனர்.
இதுகுறித்து ஆசிரியர்கள் விசாரித்தபோது, ஒருவர் பைக்கில் இருந்து கீழே விழுந்ததாகவும், ஒரு மாணவன் விளையாடும்போது கை முறிந்ததாகவும், மற்றவர்கள் பஸ்சில் இருந்து விழுந்ததில் கை முறிந்ததாகவும் கூறினர். ஒரே நேரத்தில் 4 பேருக்கு கை முறிந்தது ஆசிரியர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனால் அந்த மாணவர்களிடம் தீவிரமாக விசாரித்தனர்.
இதில் தேர்வு எழுதாமல் இருப்பதற்காக தாங்களே தங்கள் கையை முறித்துக்ெகாண்டதாக கூறினர். கையை முறிப்பது எப்படி என்பதை தெரிந்துகொள்வதற்காக கூகுளில் வீடியோக்கள் பார்த்துள்ளனர்
. அதில் கிடைத்த ஆலோசனைபடி 4 மாணவர்களும் தாங்களே தங்கள் கையை முறித்துள்ளனர். இதை கேட்டு ஆசிரியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில், கையை முறித்துக்கொண்ட மாணவர்களுக்கு தேர்வு பயத்தை போக்கவும் தவறான முடிவு எடுப்பதை தடுக்கவும் கவுன்சிலிங் கொடுக்க ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.
No comments:
Post a Comment