டி.என்.பி.எஸ்.சி., மாதிரி கேள்வித்தாள் வெளியீடு! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, November 3, 2019

டி.என்.பி.எஸ்.சி., மாதிரி கேள்வித்தாள் வெளியீடு!

டி.என்.பி.எஸ்.சி., குரூப்2, 2ஏ., தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டத்தின் படி, மாதிரி கேள்வித்தாள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.இதில், தமிழக வரலாறு, மரபு பண்பாடு, நிர்வாகம் சார்ந்த பகுதிக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது


.இது குறித்து, கோவை அரசு கல்லுாரி பேராசிரியர் மற்றும் இலவச ஐ.ஏ.எஸ்., பயிற்சியாளர் கனகராஜ் கூறியதாவது :மாதிரி கேள்வித்தாள் டி.என்.பி.எஸ்.சி., தரப்பில் பொது அறிவியல், நடப்பு நிகழ்வு, இந்தியாவின் வரலாறும் பண்பாடும், இந்திய பொருளாதாரம், இந்திய தேசிய இயக்கம், ஆகிய பாடங்களுக்கு தலா, 15 மதிப்பெண்களும், இந்திய புவியியலுக்கு, 10 மதிப்பெண்களும், இந்திய ஆட்சியியலுக்கு, 20 மதிப்பெண்கள், திறனறிவு மணக்கணக்கு மற்றும் நுண்ணறிவு பகுதிக்கு, 25 மதிப்பெண்கள், தமிழ்நாட்டின் வரலாறு,மரபு பண்பாடு மற்றும் சமூக அரசியல் இயக்கங்களுக்கு, 40 மதிப்பெண்கள், தமிழக வளர்ச்சி நிர்வாகத்திற்கு, 30 மதிப்பெண்கள் வீதம் முக்கியத்துவம் பகிரப்பட்டுள்ளது


.தமிழக பண்பாடு, வரலாறு, நிர்வாகம் குறித்த அறிவு இல்லாமல் ஒருவராலும் இத்தேர்வை எழுத முடியாது என்பது பாராட்டுதலுக்குரியது.மாணவர்கள், தற்போது மாதிரி கேள்வித்தாளில் அளிக்கப்பட்டுள்ள

 முக்கியத்துவ அடிப்படையில் பாடங்களுக்கு முக்கியத்துவம் அளித்து படிக்கவேண்டும்.பள்ளி புதிய பாடத்திட்ட புத்தகங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கவேண்டியது அவசியம்,இவ்வாறு, பேராசிரியர் கனகராஜ் கூறினார்.

No comments:

Post a Comment