பொதுத்துறை வங்கிகளில் அதிகாரி வேலை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, November 12, 2019

பொதுத்துறை வங்கிகளில் அதிகாரி வேலை


நாடு முழுவதும் இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை வங்கிகள் மற்றும் ஆந்திர பிரகாதி கிராமிய வங்கி, தமிழ்நாடு கிராமிய வங்கி, கர்நாடக கிராமிய வங்கி, மணிப்பூர் ஊரக வங்கி, பஞ்சாப் கிராமி வங்கி என ஊரக வளர்ச்சி வங்கிகளுக்கு தேவைப்படும் பணியாளர்களும், அதிகாரிகளும் 'இன்ஸ்டிடியூட் ஆஃப் பேங்கிங் பெர்சனல் செலக்‌ஷன் (ஐ.பீ.பி.எஸ்)' நிறுவனம் நடத்தும் போட்டித்தேர்வு மூலமே தேர்வு செய்யப்படுகிறார்கள்.


 முதலில் முதல்நிலை, முதன்மை எழுத்துத் தேர்வும் அதைத் தொடர்ந்து நேர்முகத் தேர்வும் நடத்தப்படும். இவற்றில் விண்ணப்பதாரர்கள் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் அவர்களுக்கு மதிப்பெண் தகுதிச் சான்று வழங்கப்படும்.நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி மட்டும் பணியாளர்களை தேர்வு செய்ய தனியாக தேர்வு நடத்துகிறது. இது தவிர மற்ற பொதுத்துறை மற்றும் கிராம வங்கிகளில் பணிபுரிய விரும்பும் இந்திய குடிமக்கள் அனைவரும் IBPS நடத்தும் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அதன்படி, தற்போது 16 பொதுத்துறை வங்கியில் காலியாக உள்ள 1163 சிறப்பு பணியிடங்களுக்கான அறிவிப்பை ஐ.பீ.பி.எஸ் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 26 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


மொத்த காலியிடங்கள்: 1163

காலியிடங்கள் ஏற்பட்டுள்ள பொதுத்துறை வங்கிகள்:
1. Allahabad Bank
2. Andhra Bank
3. Bank of Baroda
4. Bank of Maharashtra
5. Canara Bank
6. Central Bank of India]
7. Corporation Bank
8. Indian Bank
9. Indian Overseas Bank
10. Oriental Bank of Commerce
11. Punjab National Bank
12. Syndicate Bank
13. UCO Bank
14. Union Bank of India
15. United Bank of India

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: I.T. Officer (Scale-I) - 76
பணி: Agricultural Field Officer (Scale I) - 200
பணி: Rajbhasha Adhikari (Scale I) - 27
பணி: Law Officer (Scale I) - 60
பணி: HR/Personnel Officer (Scale I) - 20
பணி: Marketing Officer (Scale I) - 310

தகுதி: வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ள சம்மந்தப்பட்ட பிரிவில் இளங்கலை மற்றும் முதுகலை பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.


வயதுவரம்பு: 01.11.2019 தேதியின்படி 20 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.100, மற்ற அனைத்து பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.600 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.ibps.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.ibps.in/wp-content/uploads/CRP_SPL_IX_ADVT.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.11.2019
Click here to download

No comments:

Post a Comment