இந்தியாவிலேயே முதன் முறையாகப் இந்த படிப்புக்கான இலவச பயிற்சி தமிழகத்தில்தான் வழங்கப்பட உள்ளது:அமைச்சர் செங்கோட்டையன் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, November 23, 2019

இந்தியாவிலேயே முதன் முறையாகப் இந்த படிப்புக்கான இலவச பயிற்சி தமிழகத்தில்தான் வழங்கப்பட உள்ளது:அமைச்சர் செங்கோட்டையன்

சேலம் மாவட்டம் கொளத்தூர் நிர்மலா மேல்நிலைப் பள்ளியில் பட்டயக் கணக்காளர் (சி.ஏ) படிப்பிற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 

அந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், மாவட்ட ஆட்சியர் ராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதில், அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் மேல்நிலை வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் சுமார் 5 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்


.அந்த நிகழ்ச்சி முடிந்ததும் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், "இந்தியாவிலேயே முதன் முறையாகப் பட்டயக் கணக்காளர் (சி.ஏ) படிப்புக்கான இலவச பயிற்சி தமிழகத்தில் வழங்கப்பட உள்ளது.

தமிழகத்தில் உள்ள பல்வேறு பயிற்சி மையங்களில் சுமார் 21 ஆயிரம் மாணவர்களுக்கு அரசு சார்பில் கோச்சிங் வழங்கப்படவுள்ளது.


 அதன் படி, ஒரு ஆண்டுக்கு சுமார் 10 ஆயிரம் பட்டயக் கணக்காளர்களை உருவாக்க முடியும். இந்தியாவில் மொத்தம் 21 ஆயிரம் பட்டயக் கணக்காளர்கள் தேவை. ஆனால், 2 லட்சத்து 85 ஆயிரம் பேர் மட்டுமே உள்ளனர் " என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment