'நுழைவு தேர்வுகளை தமிழில் நடத்த வேண்டும் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, November 28, 2019

'நுழைவு தேர்வுகளை தமிழில் நடத்த வேண்டும்

'தேசிய அளவில் நடத்தப்படும், நுழைவுத் தேர்வுகள், போட்டித் தேர்வுகள் அனைத்தையும், தமிழில் நடத்த, மத்திய அரசு முன் வர வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


 அவரது அறிக்கை:ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., உள்ளிட்ட அறிவியல், தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர, ஐ.ஐ.டி., கூட்டு நுழைவு தேர்வுகளின் முதன்மை தேர்வை, இனி தமிழ் உள்ளிட்ட, 10 மாநில மொழிகளில் நடத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.வரும், 2021 முதல், தமிழ்வழி தேர்வு நடைமுறைக்கு வருகிறது.

ஆனால், கூட்டு நுழைவு தேர்வுகள், 2020 ஜனவரி மற்றும் ஏப்ரல் என, இரு முறை நடத்தப்பட உள்ளன.ஜனவரியில் இல்லாவிட்டாலும், ஏப்ரலில் நடக்க உள்ள, ஐ.ஐ.டி., கூட்டு நுழைவு தேர்வுகளையாவது, தமிழ் மொழியில் நடத்த, மத்திய அரசு முன் வரவேண்டும்.


 ஐ.ஐ.டி., கூட்டு நுழைவு தேர்வுகள் மட்டுமின்றி, தேசிய அளவில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகள், போட்டித் தேர்வுகள் அனைத்தையும், தமிழில் நடத்த மத்திய அரசு முன் வர வேண்டும்.இவ்வாறு, ராமதாஸ் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment