வன மரபியல் மற்றும் மரம் இனப்பெருக்கம் நிறுவனத்தில் வேலை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, November 5, 2019

வன மரபியல் மற்றும் மரம் இனப்பெருக்கம் நிறுவனத்தில் வேலை

வன மரபியல் மற்றும் மர இனப்பெருக்கம் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள எம்டிஎஸ் மற்றும் கிளார்க் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பணியிடம்: கோயம்புத்தூர்

மொத்த காலியிடங்கள்: 15

பணிகள்: Multi-Tasking Staff (MTS) -14
சம்பளம்: மாதம் ரூ.18,000

பணி: Lower Division Clerk (LDC) - 01
சம்பளம்: மாதம் ரூ.19,900

தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும்.தேர்ந்தெடுக்கும் முறை: எழுத்து தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை: http://ifgtb.icfre.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Director, Institute of Forest Genetics and Tree Breeding (IF GTB), Forest Campus, Cowly Brown Road, R.S. Puram, Coimbatore - 641002.

விண்ணப்ப கட்டணம்: எஸ்சி, எஸ்டி, பெண்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.100, மற்ற பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.300 கட்டணமாக செலுத்த வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://ifgtb.icfre.gov.in/advertisements.php என்ற லிங்கில் சென்று கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 25.11.2019

No comments:

Post a Comment