அப்டேட் செய்யப்பட்ட 'எம்ஆதார்' செயலி! இனி ஆதார் மாற்றங்களை மொபைலில் செய்யலாம்! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, November 27, 2019

அப்டேட் செய்யப்பட்ட 'எம்ஆதார்' செயலி! இனி ஆதார் மாற்றங்களை மொபைலில் செய்யலாம்!

13 மொழிகளில் உள்ள 'எம்ஆதார்' செயலியில் பாதுகாப்பு மற்றும் வசதிகளை மேம்படுத்தும் விதமாக புதிய பதிப்பு வெளியாகியுள்ளது


.எம்ஆதார்' செயலியை மிகவும் பாதுகாப்பானதாக மாற்றி புதிய பதிப்பை ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் சாதனங்களுக்காக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது


.இந்தி, பெங்காலி, ஒடியா, உருது, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், குஜராத்தி, பஞ்சாபி, மராத்தி மற்றும் அசாமி உள்ளிட்ட 13 மொழிகளில் முந்தைய பதிப்புகளை நீக்கிவிட்டு புதிய பதிப்பை உடனடியாக பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தியுள்ளது



.இந்த செயலியின் மூலம் பயனர்கள் ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்வது, ஆஃப்லைன் கே.ஒய்.சி., கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்வது, ஆதார் மறுபதிப்பு செய்து பெறுவது, முகவரியைப் புதுப்பித்தல், ஆதார் விவரம், மின்னஞ்சல் சரிபார்த்தல், முகவரி சரிபார்ப்பு கடிதத்திற்கான கோரிக்கை ஆகியவற்றை கைபேசியிலேயே செய்து கொள்ளலாம். 


மேலும், இதன் மூலம் ஆதார் அல்லது பயோமெட்ரிக் அங்கீகாரத்தை பயனர்களே லாக் செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment