தாஜ்மகாலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு 'வாவ்' சொல்ல வைக்கும் சிறப்பு வசதி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, November 16, 2019

தாஜ்மகாலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு 'வாவ்' சொல்ல வைக்கும் சிறப்பு வசதி

தாஜ்மகாலைப் பார்க்க வரும் சுற்றலாப் பயணிகள், தாஜ்மகாலை சற்று தொலைவில் நின்று ஒட்டுமொத்த அழகையும் கண்டுரசிக்கும் வகையில் உத்தரப்பிரதேச அரசு ஒரு புதிய திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.


தாஜ்மகாலின் அழகைக் காண புதிதாகக் கட்டப்பட்ட வியூ பாயிண்ட் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டிருக்கிறது. இங்கு நின்றபடி, நிலா வெளிச்சத்தில் தாஜ்மகாலின் அழகைக் கண்டுகளிக்கலாம்.


தாஜ்மகாலுக்கு அருகே மேஹ்தாப் பாக் தாஜ் வியூ பாயிண்ட்டை மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் திறந்துவைத்தார்.

 இந்த வியூ பாயிண்ட், தினமும் காலை 7-10 மணி வரையும், மாலையில் 7-10 மணி வரையும் திறக்கப்படும்.கட்டணமாக ரூ.20 வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதுஆக்ரா மேம்பாட்டுக் கழகத்தால் இந்த தாஜ் வியூ பாயிண்ட் உருவாக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில், இதுபோல ஏராளமான பகுதிகளில் வியூ பாயிண்ட்கள் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

புதிதாகத் திறக்கப்பட்ட வியூ பாயிண்டில் இருந்து தாஜ் மகாலைப் பார்த்து சுற்றுலாப் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.


இரவு நேரத்தில் தாஜ் மகாலின் அழகை இவ்வளவு அருகில் நின்று முழுமையாக பார்ப்பது என்பது கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது என்று சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment