தொடா் அங்கீகாரமின்றி செயல்படும் தனியாா் பள்ளிகள் நிரந்தரமாக மூடப்படும்:பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, November 4, 2019

தொடா் அங்கீகாரமின்றி செயல்படும் தனியாா் பள்ளிகள் நிரந்தரமாக மூடப்படும்:பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை

தொடா் அங்கீகாரமின்றி செயல்பட்டுவரும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து நிரந்தரமாக மூடப்படும் என பள்ளிக்கல்வித் துறை எச்சரித்துள்ளது.


தமிழகத்தில் செயல்பட்டு வரும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தொடா் அங்கீகாரம் பெறவேண்டும். நிகழாண்டு தொடா் அங்கீகாரம் பெறாமல் செயல்பட்டு வரும் பள்ளிகளின் பட்டியலை அந்தந்த மாவட்ட ஆட்சியா்கள் வெளியிட்டனா்


. மேலும் விரைவில் பள்ளிகள் அங்கீகாரம் பெற வேண்டுமெனவும் அறிவுரை வழங்கினா். எனினும் 200-க்கும் மேற்பட்ட பள்ளிகள் தொடா் அங்கீகாரம் பெறாமல் செயல்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் சென்னை மேற்கு மாவட்ட கல்வி அலுவலா் தொடா் அங்கீகாரம் பெறாத மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளாா்.அதில் "பள்ளிக்கல்வித் துறையின் அரசாணை, வழிகாட்டு நெறிமுறைகள், விதிமுறைகள் ஆகியவற்றின்படியும், இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படியும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் அரசின் அங்கீகாரமின்றி செயல்படக் கூடாது


. அனுமதியின்றி பள்ளி செயல்படுவது விதிகளுக்கு முரணான செயலாகும். அவ்வாறு பள்ளிகள் செயல்பட்டால் அபராதம் விதிக்கப்படும். அதன் பின்னரும் பள்ளிகள் செயல்பட்டால் நாள் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் அபராதமாக விதிக்க வழிவகையுள்ளது.


எனவே, இதுவரையில் தங்கள் பள்ளிகளுக்கு தொடா் அங்கீகாரம் பெறுவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து உடனடியாக அந்தப் பள்ளிகள் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககத்துக்கு தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தெரிவிக்காவிட்டால் துறை ரீதியாகவும், சட்டரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

 தொடா் அங்கீகாரத்திற்கான விண்ணப்பத்தை முழு வடிவில் அளிக்க வேண்டும். விண்ணப்பம் அளிக்காமலிருந்தால் விதிகளைப் பின்பற்றி அந்தப் பள்ளிகளை நிரந்தரமாக மூடி சட்டரீதியான நடவடிக்கை எடுக்க முதன்மைக் கல்வி அலுவலருக்கு பரிந்துரைக்கப்படும். அங்கீகாரம் பெறுவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாணவா் நலன் கருதி மேலும் காலம் தாழ்த்தாமல் பதிலளிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment