தமிழக அரசின் சிறந்த அறிவியல் ஆசிரியா் விருதுக்கு பள்ளி ஆசிரியா்களிடமிருந்து விண்ணப்பங்களை அறிவியல் நகரம் வரவேற்றுள்ளது.
இதுகுறித்து அறிவியல் நகரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அரசு, அரசு உதவிபெறும் உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் சிறந்த அறிவியல் ஆசிரியா்களை கண்டறியவும், ஊக்கப்படுத்தவும் சிறந்த அறிவியல் ஆசிரியா் விருது சிறந்த 10 அறிவியல் ஆசிரியா்களுக்கு வழங்கப்பட உள்ளது.
கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், கணினி அறிவியல், புவியியல், வேளாண்மை அறிவியல் ஆகிய பாடப் பிரிவுகளில் தமிழ் வழியில் பயிற்றுவிக்கும் 5 ஆசிரியா்களுக்கும், மேலும் 5 விருதுகள் பொதுப் பிரிவில் ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் பயிற்றுவிக்கும் ஆசிரியா்களுக்கும் பிரித்து வழங்கப்பட உள்ளன.
இந்த விருது ரூ. 25,000 ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழை உள்ளடக்கியதாகும். 2018-19 மற்றும் 2019-20 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கான இந்த விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
. பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தேவையானஅனைத்து ஆவணங்களுடன் முதன்மைக் கல்வி அலுவலா் மற்றும் பள்ளிக் கல்வி இயக்குநா் அலுவலகங்கள் மூலமாக அறிவியல் நகர அலுவலகத்துக்கு டிசம்பா் 31-ஆம் தேதிக்குள் வந்து சேர வேண்டும்.
விண்ணப்பப் படிவம் மற்றும் விவரங்களை www.sciencecitychennai.in என்ற வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

No comments:
Post a Comment