தொலைநிலை படிப்புக்கு : அரசு பல்கலைகளில் சேர்க்கை குறையும்? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, November 22, 2019

தொலைநிலை படிப்புக்கு : அரசு பல்கலைகளில் சேர்க்கை குறையும்?

சென்னை:தனியார் பல்கலைகளும், தொலைநிலை கல்வி வழங்குவதற்கு, பல்கலை மானிய குழு அனுமதி அளித்துள்ளது. அதனால், அரசு பல்கலைகளில், மாணவர் சேர்க்கை குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது

.நாடு முழுவதும், கல்லுாரிகள் மற்றும் பல்கலைகள் அனைத்தும், மத்திய அரசின் பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி.,யின் அனுமதியுடன் செயல்படுகின்றன. மாநில அரசுகள் தரப்பில் அங்கீகாரம் வழங்கப்படுகிறது.


அனுமதிஅதேபோல, தனியார் நடத்தும் கல்லுாரிகளில், உள்கட்டமைப்பின் அடிப்படையில், சுயநிதி பல்கலைகளுக்கான அனுமதி தரப்படுகிறது. இதில், அரசு பல்கலைகள் மட்டும், மாநில அளவில் கல்வி பயிற்சி அளிக்கும் பணிகளை மேற்கொள்ளலாம்; தொலைநிலை கல்வியும் நடத்தலாம்.


 ஆனால், தனியார் பல்கலைகள், 'ரெகுலர்' வகுப்புகளை மட்டுமே நடத்த வேண்டும். தங்களின் வளாகத்துக்கு வெளியே வகுப்புகளை நடத்த முடியாது; தொலைநிலை வகுப்புகளையும் நடத்த முடியாது. இந்நிலையில், தனியார் பல்கலைகளும் தொலைநிலை வகுப்புகளை நடத்தலாம் என, மத்திய அரசின், யு.ஜி.சி., அமைப்பு அறிவித்துள்ளது. இதற்காக, அனுமதி பெற்ற பல்கலைகளின் பட்டியலையும், இணையதளத்தில் வெளியிட்டு உள்ளது. 


தமிழகத்தில், எஸ்.ஆர்.எம்., கல்வி நிறுவனம், சாஸ்த்ரா கல்வி நிறுவனம், ஸ்ரீராமச்சந்திரா கல்வி நிறுவனம் ஆகியன, தொலைநிலை கல்வி நடத்துவதற்கு, யு.ஜி.சி., தரப்பில் அனுமதி வழங்கப் பட்டு உள்ளது. விபரங்களை, www.ugc.ac.in/ugc_notices.aspx என்ற, இணையதள இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.தனியார் நிறுவனங்கள், தொலைநிலை கல்வியை நடத்த அனுமதி அளிக்கப் பட்டுள்ளதால், அரசு பல்கலைகளில், மாணவர் சேர்க்கை குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

 நிதி நெருக்கடிசென்னை பல்கலை, மதுரை காமராஜ், அழகப்பா, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை உள்ளிட்ட, பல அரசு பல்கலைகள், தொலைநிலை கல்வியால் கிடைக்கும் வருமானத்தில் தான், 'ரெகுலர்' வகுப்புகளுக்கான செலவுக்கும், பேராசிரியர்களின் சம்பளத்துக்கும், நிதி ஒதுக்குகின்றன. இந்நிலையில், தனியார் பல்கலைகளும், தொலைநிலை கல்வியை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், அரசு பல்கலைகளுக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்படும்.


No comments:

Post a Comment