தங்க நகை அணிவதால் என்ன நன்மை ? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, November 27, 2019

தங்க நகை அணிவதால் என்ன நன்மை ?

காதில், மூக்கில், கழுத்தில், கைகளில் அணியும் தங்க நகைகள் நம் உடம்பில் உள்ள வர்மப் புள்ளிகளைத் தூண்டி நம் உடம்பின் ஒவ்வொரு உறுப்பின் நலனையும் பராமரிக்க உதவுகிறது என்கின்றனர் அக்குப்பஞ்சர் மருத்துவர்கள்

.

உயிர் ஓட்டப்பாதையில் பாதுகாக்கும்


நம் உடலின் நரம்பு மண்டலங்களைப் போல, நம் உயிர் ஓடும் சக்திக்கு என்று தனிப்பாதைகள் உண்டு. 'நாடி ஓட்டப் பாதை' என்று இதற்குப் பெயர். உயிர்ச்சக்தி ஓட்டப் பாதைகள் என்றும் சொல்வோம். நாடிகளும், நரம்புகளும் முக்கிய இடங்களில் ஒன்று சேர்வதை வர்மப் புள்ளிகள் என்கிறோம். இவற்றை தூண்டுவதன் மூலம் நோய்களை குணப்படுத்துவது அக்குப்பஞ்சர்

.உடம்பில தேஜஸ் அதிகரிக்கும்

அதேபோல தங்கத்தை காது, மூக்கு கைகளில் போடுவதற்குக் ஸ்பெசல் காரணம் என்னவெனில், தங்கம் உடம்பைத் தொட்டபடி இருந்தால் நம் உடலின் தேஜஸ் அதிகரித்து அழகு மிளிரும் என்கின்றனர் நிபுணர்கள்.



வெள்ளிக் கொலுசுமணி

அதேபோல் கால்களில் போடப்படும் வெள்ளிக்கொலுசு பெண்களின் கால்நோவுகளை நீக்குகிறதாம். மாதவிலக்கு சமயத்தில் அதிகஅளவில் சிரமத்திற்கு ஆளாவதில் இருந்து பாதுகாக்கிறதாம்.

கட்டாயம் நகை போடுங்க

நாம் போடுவது தங்கமோ, வெள்ளியோ அல்லது சாதாரண மெட்டலோ எதுவாக இருந்தாலும், அந்த ஆபரணம் என்பது நம் உடலின் அக்குபஞ்சர் புள்ளிகளைத் தூண்டித்தான் விடுகிறது. அதற்காகவாவது, இனி நாம் நகைகளைப் போடுவோம். இதனால் பல வியாதிகள் கட்டுப்படும் என்கின்றர் நிபுணர்கள்.!


தாமிரப்பானைல தண்ணீர்
அதேபோல் தாமிரப் பானையில் இரவில் தண்ணீர் ஊற்றிவைத்து அதை காலை நேரத்தில் குடித்தால் அது அருமருந்து என்கிறது ஆயுர்வேதம். அதேபோல் வெள்ளி தம்ளர் உபயோகித்தாலும் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமாம். தமிரம் உடலில் ரத்தச் சிவப்பணுக்களை அதிகரிக்குமாம். சரும ஆரோக்கியத்தையும், கூந்தலை ஆரோக்கியமாகவும் பேணிக்காக்கிறதாம்.

No comments:

Post a Comment