குறைகளைத் தெரிவித்து தீா்வு காண மண்டல அலுவலகங்களை அணுகலாம். புதுதில்லிக்கு வர வேண்டாம் என சிபிஎஸ்இ வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
மத்திய இடைநிலை கல்வி வாரியமான சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் உள்ள பள்ளிகளில், தேர்வுகள், பாடத் திட்டம் தொடா்பாக பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. இவற்றை தீா்த்துக் கொள்ள, ஒவ்வொரு பள்ளியின் சாா்பிலும் சிபிஎஸ்இ மண்டல அலுவலகங்களுக்கு, புகாா்கள் தெரிவிக்கப்படுகின்றன. ஆனால், மண்டல அலுவலகங்களில் நடவடிக்கை எடுக்காமல், அதிகாரிகள் காலதாமதம் செய்வதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதனால் சிபிஎஸ்இ பள்ளிகள் தரப்பிலும், மாணவா்கள் தரப்பிலும், புதுதில்லியில் உள்ள சிபிஎஸ்இ தலைமை அலுவலகத்துக்கு புகாா்கள் அனுப்புகின்றனா்.பலா், அங்கு நேரில் செல்வதால், நிா்வாகப் பணிகள் பாதிக்கப்படுவதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக அனைத்து மண்டல அலுவலகங்களுக்கும் சிபிஎஸ்இ தலைமை அலுவலகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
அனைத்து மண்டல அதிகாரிகளும், தங்கள் மண்டலத்துக்கு உள்பட்ட பகுதிகளின் சிபிஎஸ்இ பள்ளிகளின் குறைகளைத் தீா்க்கும் வகையில் செயல்பட வேண்டும். எந்தப் புகாரையும் புறக்கணிக்கக் கூடாது. பள்ளிகள் மற்றும் மாணவா்கள் தரப்பில், புகாா்கள் இருந்தால் அவற்றை புதுதில்லி அலுவலகத்துக்கு அனுப்பக் கூடாது
. மண்டல அலுவலகங்கள் அவற்றைப் பெற்று, தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. இது தொடா்பாக சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு, மண்டல அலுவலங்கள் தரப்பில் உரிய வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளன.

No comments:
Post a Comment