வருகை பதிவு செய்யாத தலைமை ஆசிரியர்கள், எழுத்துப்பூர்வ அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, November 13, 2019

வருகை பதிவு செய்யாத தலைமை ஆசிரியர்கள், எழுத்துப்பூர்வ அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு

சேலம் மாவட்டத்தில் வருகை பதிவு செய்யாத தலைமை ஆசிரியர்கள், எழுத்துப்பூர்வ அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது

.த
மிழக அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் ஆதார் எண் அடிப்படையிலான பயோ மெட்ரிக் கருவி பொருத்தப்பட்டு, ஆசிரியர்கள் வருகை பதிவு செய்யப்படுகிறது.


துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், மொபைல்போன் செயலி மூலம் வருகை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 இதில் பள்ளிக்கு உரிய நேரத்துக்கு செல்லாத ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள், போனில் சிக்னல் கிடைக்கவில்லை எனக்காரணம் கூறி, வருகை பதிவு செய்யாமல் தவிர்த்து வருகின்றனர்.


வருகை பதிவு செய்யாத ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர்கள் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவர்கள் பதிவு செய்யாமைக்கான காரணம் குறித்து, எழுத்துப்பூர்வ அறிக்கையை தாக்கல் செய்ய, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி உத்தரவிட்டுள்ளார்இதனால், பலரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

No comments:

Post a Comment