வால்பாறை மலைப்பகுதியிலிருந்து, பயிற்சிக்காக பொள்ளாச்சி செல்லும் ஆசிரியர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தமிழக அரசின் புதிய பாடத்தின் கீழ் பயிற்சி பெற வால்பாறையில், 120 இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, இரண்டு பிரிவாக பொள்ளாச்சியில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
வால்பாறையிலிருந்து, 64 கி.மீ.,தொலைவில் உள்ள பொள்ளாச்சிக்கு, தினசரி பயிற்சிக்காக செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால், மலைப்பகுதியிலிருந்து பயிற்சிக்காக செல்லும் ஆசிரியர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இது குறித்து ஆசிரியர்கள் கூறியதாவது,புதிய பாடத்திட்டத்தின் கீழ், வால்பாறையை சேர்ந்த ஆசிரியர்களுக்கு இரண்டு கட்டங்களாக, பொள்ளாச்சியில் பயிற்சி நடக்கிறது.
வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த வால்பாறையிலிருந்து, அதிகாலை நேரத்தில் மூன்று மணி நேரம் பஸ்சில் பயணம் செய்ய வேண்டியுள்ளது. அதேபோல் பயிற்சி முடிந்த பின், மீண்டும் மூன்று மணி நேரம் பஸ்சில் பயணம் செய்த பின், பல்வேறு எஸ்டேட் பகுதிகளுக்கு நள்ளிரவில் செல்ல வேண்டியுள்ளது.
பயிற்சிக்காக பொள்ளாச்சிக்கும், வால்பாறைக்கும் ஆசிரியர்களை அலைக்கழிப்பதை தவிர்க்க, வால்பாறை நகரிலேயே, இந்த பயிற்சி நடத்த வேண்டும், என்றனர்.

No comments:
Post a Comment