ஆசிரியர்கள் பான் கார்டு விபரம் சேகரிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, November 28, 2019

ஆசிரியர்கள் பான் கார்டு விபரம் சேகரிப்பு

ஆசிரியர்களின் வங்கி கணக்கு மற்றும் பான் கார்டு விபரங்களை, ஆன்லைனில் பதிவு செய்ய, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


 தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் மற்றும் அரசு பணியில் உள்ள ஆசிரியர்களின் விபரங்களை, 'எமிஸ்' என்ற கல்வி மேலாண்மை இணையதளத்தில், பதிவு செய்யும் பணி நடந்து வருகிறது. ஆசிரியர்களின் பணியிடங்கள் உள்ளிட்ட அனைத்து விபரங்களும், பதிவு செய்யப்பட்டு, அதன்படியே இடமாறுதல் கவுன்சிலிங் வழங்கப் பட்டுள்ளது.



இந்நிலையில், ஆசிரியர்களின் வங்கி கணக்கு எண் மற்றும் பான் கார்டு விபரங்களை, எமிஸ் இணையதளத்தில் உடனடியாக பதிவு செய்யுமாறு, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதனால், ஆசிரியர்களின் வங்கி கணக்கு விபரங்கள் மற்றும் வருமானம் ஆகியவை, கல்வி துறையின் கண்காணிப்பு வளையத்தில் வர உள்ளன.

No comments:

Post a Comment