சச்சின் சாதனையை சமன் செய்த கோஹ்லி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, November 23, 2019

சச்சின் சாதனையை சமன் செய்த கோஹ்லி

டெஸ்ட் அரங்கில் அதிவேகமாக 27 சதம் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில், ஜாம்பவான் சச்சினின் சாதனையை சமன் செய்தார் கோஹ்லி.இந்தியா வந்துள்ள வங்கதேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. 


இரண்டாவது டெஸ்ட் கோல்கட்டாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடக்கிறது. முதல் இன்னிங்சில் வங்கதேச அணி 106 ரன்கள் எடுத்தது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 174 ரன்கள் எடுத்திருந்தது.



 கேப்டன் கோஹ்லி (59), ரகானே (23) அவுட்டாகாமல் இருந்தனர்.இன்று இரண்டாம் நாள் ஆட்டம் நடக்கிறது. சிறப்பாக செயல்பட்ட கோஹ்லி, 27வது சதம் எட்டினார்.இதன் மூலம், டெஸ்ட் அரங்கில் 27 சதத்தை அதிவேகமாக எட்டிய இந்திய வீரர்கள் பட்டியலில் ஜாம்பவான் சச்சின் சாதனையை சமன் செய்தார். இருவரும் 141 இன்னிங்சில் எட்டினர். சர்வதேச அளவில் இவர்கள் இரண்டாவது இடம் வகிக்கின்றனர். முதலிடத்தில், ஆஸ்திரேலிய ஜாம்பவான் பிராட்மேன் உள்ளார்.


இவர் 70 இன்னிங்சில் 27 சதம் எட்டினார். முதலிடம் அபாரமாக விளையாடிய கோஹ்லி, டெஸ்ட் (20), ஒருநாள் போட்டிகளில் (21) சேர்த்து சர்வதேச அரங்கில் கேப்டனாக அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில், ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் (டெஸ்ட்- 19, ஒரு நாள்- 22) உடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டார்.


 இருவரும் இதுவரை 41 சதம் அடித்துள்ளனர். இரண்டாவது இடத்தில் தென் ஆப்ரிக்காவின் கிரீம் ஸ்மித் (33) உள்ளார்.டெஸ்ட் (27), ஒரு நாள் போட்டியில் (43) சேர்த்து கோஹ்லி 70 சதம் அடித்துள்ளார். இதன் மூலம், சர்வதேச அரங்கில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் நீடிக்கிறார். முதலிரண்டு இடங்களில் முறையே இந்திய ஜாம்பவான் சச்சின் (100), ஆஸ்திரேலியாவின் பாண்டிங் (71) உள்ளனர்.

No comments:

Post a Comment