தேர்வு மையங்களில் 'ஜாமா்கள்' கட்டாயம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, November 4, 2019

தேர்வு மையங்களில் 'ஜாமா்கள்' கட்டாயம்


முறைகேடுகளைத் தடுக்க தேர்வு மையங்களில் 'ஜாமா்'களை (செல்லிடப்பேசி சமிக்ஞைகளை முடக்கும் கருவி) நிறுவுவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், இதுதொடா்பான அரசின் கொள்கை முடிவுகளை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என பல்கலைக்கழகங்களுக்கு, பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) உத்தரவிட்டுள்ளது.


ரேடியோ அதிா்வெண் அடிப்படையிலான சாதனங்கள் மூலம் தேர்வுகளில் முறைகேடு நடப்பதைத் தடுக்கும் வகையில், சோதனை முறையில் குறைந்த ஆற்றல் கொண்ட 'ஜாமா்'களை தேர்வு மையங்களில் பொருத்த வேண்டும் என 2016-ஆம் ஆண்டில் அரசு கொள்கை முடிவெடுத்தது.



பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் ஜாமா்கள் குறித்த அரசின் உத்தரவு பின்பற்றுவதை உறுதிப்படுத்த வேண்டும் என யுஜிசி சாா்பில் பல்கலைக்கழக துணைவேந்தா்களுக்கும், கல்லூரி தாளாளா்களுக்கும் ஏற்கெனவே எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.



எலக்ட்ரானிக்ஸ் காா்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் மற்றும் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் ஆகிய இரு அரசு நிறுவனங்கள், வாடகை அடிப்படையில், தோவு மையங்களுக்கு குறைந்த சக்தி கொண்ட ஜாமா்களை வழங்க அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

 அங்கீகரிக்கப்படாத உற்பத்தியாளா்களிடமிருந்து ஜாமா்களை பெறக் கூடாது என்று அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment