காலை வழிபாடு மற்றும் தினசரி செயல்பாடுகள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, November 3, 2019

காலை வழிபாடு மற்றும் தினசரி செயல்பாடுகள்

காலைவழிபாட்டுச் செயல்பாடுகள் - 04-11-2019, T.தென்னரசு
காலைவழிபாட்டுச்  செயல்பாடுகள்
04-11-2019
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றையதிருக்குறள்

முயலும் ஆமையும்

குறள் : 670

எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டாது உலகு.

விளக்கம் :


எவ்வளவுதான் வலிமையுடையவராக இருப்பினும் அவர் மேற்கொள்ளும் செயலில் உறுதியில்லாதவராக இருந்தால், அவரை உலகம் மதிக்காது.

கதை :

ஒரு காட்டில் பல மிருகங்கள் வசித்து வந்தன.

அங்கு வசித்து வந்த முயலுக்கு கர்வம் அதிகம். அது தானே இக்காட்டில் வேகமாக ஓடுவேன் என்ற கர்வம் வந்தது.

மெதுவாக நகரக்கூடிய ஆமையிடம் ஏளனமாக ஒருநாள் முயல் தன்னுடன் ஓட்டப் பந்தயத்திற்கு வருமாறு கேட்டது.

முதலில் இல்லை எனக்கூறிய ஆமை முயலின் கர்வத்தை அடக்க வேண்டுமென நினைத்து ஆம் என்றது.


பல மிருகங்களுக்கு இடையில் போட்டி ஆரம்பமானது. ஒரு முடிவிடமும் அறிவிக்கப்பட்டது. முயல் ஆமையை விட பன்மடங்கு வேகத்தில் ஓடியது.

ஆமையோ மிகவும் மெதுவாகவே சென்றது. முக்கால்வாசி தூரம் ஓடி முடித்த முயல் ஆமை மெதுவாக வருவதைக்கண்டு ஒருமரத்தின் கீழ் நித்திரை செய்தது. ஆமையோ மெது மெதுவாக முயல் தூங்கிய தூரத்தைக்கடந்து முடிவுக்கோட்டை நெருங்கியது. அந்த நேரம் தூக்கம் கலைந்த முயல், ஆமை எல்லையை நெருங்கியதை கண்டு ஓட்டம் பிடித்தது. எனினும் முயலுக்கு முதல் ஆமை வெற்றி இலக்கை அடைந்தது.

நீதி :

நிதானம் பிரதானம்.

பொன்மொழி

தேசத்தை பற்றிய நோக்கமும் செயல்பாடுகளும் சரியானதாக இருந்தால் , அது மக்களிடையே நிதானமான வளர்ச்சியைத் தரும்.
 - அப்துல் கலாம்

✡✡✡✡✡✡✡✡
பழமொழி மற்றும் விளக்கம் 
முதலைக் கண்ணீர் வடிப்பது போல. 
விளக்கம் :
யாராவது போலியாக அழும்போது முதலைக் கண்ணீர் வடிப்பது போன்று என்று ஒரு பழமொழியைச் சொல்வார்கள். அதாவது அறிவியல் பூர்வமாக முதலை கண்ணீர் வடிப்பதில்லை. அதனால் இந்த அழுகை போலியானது என்பதை உணர்த்துவதற்காக அவ்வாறு சொல்லப்படுகிறது. ஆனால் அதற்கான பொருள் அதுவல்ல முதலை இழந்தவன் வடிக்கிற கண்ணீர் போல என்பதுதான் நாளடைவில் திரிந்து முதலைக் கண்ணீர் என்றாகிவிட்டது. அதாவது தொழிலில் பணத்தை போட்டு செய்தவன் இழப்பு ஏற்பட்டால் கண்ணீர் வடிப்பதைப் போன்றது என்பதை கூறவே இந்த பழமொழி உண்டானது.
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

Important  Words

1. Foundation - அறக்கட்டளை
2. Garden - தோட்டம்
3.Verandah - தாழ்வாரம்
4. Window - சன்னல்

✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு

1. அரபிக் கடலின் ராணி எது
கேரளா
2. வட துருவத்தை அடைந்த முதல் நபர் யார்?
ராபர்ட் பியரி

📫📫📫📫📫📫📫📫
விடுகதை

1. சின்னத் தம்பி, குனிய வச்சான். அது என்ன?

 முள்

2. காடும் கருங்காடு, கம்பும் கருங்கம்பு. குத்துவார் உண்டு, தின்பாரில்லை. அது என்ன?

பேன்
அறிவோம்! கூறுவோம் !விவசாயம்!

முட்டைகோஸ் 

🌺 முட்டைகோஸ் வெறுமனே இலைகளால் ஆன ஒரு காயாகும்.

🌺 மனித இனத்துக்கு முதலில் அறிமுகமான காய்கறிகளில் ஒன்று முட்டைகோஸ்.

🌺 கி.மு. 200-ம் ஆண்டில் கிரேக்கர்களும், ரோமானியர்களும் முட்டைகோஸை பல்வேறு காரணங்களுக்கு பயன்படுத்தியுள்ளனர்.

🌺 உலகளவில் அதிகமாக முட்டைக்கோஸ் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இமாச்சல பிரதேசம், தமிழ்நாடு ஆகிய இடங்களில் அதிகமாக பயிரிடப்படுகிறது.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:

T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

செய்திச்சுருக்கம்.

🔮டெல்லியில் காற்று மாசு: பஞ்சாபில் வயல்வெளியில் சருகுகளை எரித்த விவசாயிகள் மீது வழக்குகள் பதிவு.

🔮உள்ளாட்சி தேர்தலை 3 கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் முடிவு?

🔮திருக்குறள் தாய்லாந்து மக்களுக்கு வழிகாட்டியாக அமையும் - பிரதமர் மோடி பேச்சு.

🔮வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி ஒரு ரன்னில் தோல்வி.

🔮அந்தமான் கடல்பகுதியில் புதிய காற்றழுத்தம் தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்.


🔮டோக்கியோவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இந்திய மகளிர் ஹாக்கி அணி தகுதி பெற்றது

HEADLINES


🔮Delhi’s air pollution level borders on ‘severe plus’.

🔮India has stopped working in a bureaucratic manner: PM Modi in Thailand.

🔮Action taken against 2,933 farmers in Punjab for stubble burning.

🔮21 dead after two powerful earthquakes hit Philippines in one week.


🔮This TN college is promoting ink pen among students to fight plastic menace.

No comments:

Post a Comment