காலை வழிபாடு மற்றும் தினசரி செயல்பாடுகள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, November 13, 2019

காலை வழிபாடு மற்றும் தினசரி செயல்பாடுகள்

காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 14-11-2019 - T. தென்னரசு
காலை வழிபாட்டுச்  செயல்பாடுகள்
14-11-2019
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றைய திருக்குறள்
குறள்எண்- 808

அதிகாரம் -பழைமை

கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
 நாளிழுக்கம் நட்டார் செயின்.

மு.வ உரை:

பழகிய நண்பர் செய்த தவறு பற்றிப் பிறர் சொன்னாலும், கேளாமலிருக்கும் உரிமை வல்லவர்க்கு, அந்த நண்பர் தவறுசெய்வாரானால் அது பயனுள்ள நாளாகும்.

கருணாநிதி  உரை:

நண்பர்கள் செய்யும் குற்றத்தைப் பிறர்கூறி அதனை ஏற்றுக் கொள்ளாத அளவுக்கு நம்பிக்கையான நட்புரிமை கொண்டவரிடத்திலேயே அந்த நண்பர்கள் தவறாக நடந்து கொண்டால் அவர்களுடன் நட்புக் கொண்டிருந்த நாளெல்லாம் வீணான நாளாகும்.

சாலமன் பாப்பையா உரை:


நண்பன் உரிமை எடுத்துச் செய்து பிழையை அடுத்தவர் எடுத்துக்காட்டியும் ஏற்றுக் கொள்ளாத நட்புரிமை உடையவர்க்கு நண்பன் பிழை செய்யும் நாள் பயனுள்ள நாளாம்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி


நமது செயல் தான் நமக்கு நல்ல பெயர் வாங்கித் தரும். எனவே நாம் செய்யும் செயலில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உலகில் தனக்கும் ஓர் இடம் உண்டாக்கிக் கொள்ளும்.
 - அப்துல் கலாம்
✡✡✡✡✡✡✡✡
பழமொழி மற்றும் விளக்கம்

மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா?
பொருள்:
மண் குதிரையில் ஆற்றை கிடந்ததால், உடனே மண் கரைந்து, ஆற்றில் மாட்டி கொள்ள நேரிடும்.
உண்மையான பொருள்:
மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்கலாமா?
மண் குதிர் என்பது ஆற்றின் நடுவில் இருக்கும் மணல் திட்டு /மேடு. இதை நம்பி ஆற்றில் இறங்கினால் ஆற்றில் சிக்கி கொள்ள நேரிடலாம்.
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

Important  Words

1.Carpet - கம்பளம்
2. Comb - சீப்பு
3. Matress - மெத்தை
4. Easy-chair - சாய்வு நாற்காலி

✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு

1. அகத்திக் கீரையில் உள்ள வைட்டமின் எது ?

 வைட்டமின் A

2. யாருடைய பிறந்த நாளை குழந்தைகள் தினமாக கொண்டாடுகிறோம் ?

 பண்டித ஜவஹர்லால் நேரு
📫📫📫📫📫📫📫📫
விடுகதை

1. பச்சைக் கதவு : வெள்ளை சன்னல் : கறுப்பு ராஜா - அது என்ன?

  சீதாப்பழம்

2. மொட்டைப் பாட்டிக்கு மூழ்கத் தெரியாது. அது என்ன ?

  வெண்ணெய்
அறிவோம்! கூறுவோம் !விவசாயம்!

சிறுகீரை

🌿 இந்தியாவில் தோட்டங்களிலோ, வீட்டுத் தோட்டங்களிலோ பயிர் செய்யப்படும் கீரை வகைகளில் இக்கீரையும் ஒன்றாகும். இக்கீரையானது வட இந்திய மலைப் பகுதிகளில் ஏராளமாக விளையக்கூடியது.


🌿 இந்தக் கீரையானது முளைக்கீரை, தண்டுக் கீரை அகிய கீரைகளின் இனத்தைச் சார்ந்தது.

🌿 நிறைய கிளைகள் உடையதாக இருக்கும். இச்செடி மிக மெல்லிய தோற்றமுடையது.

👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை

நாளை என்பது நம் கையில் இல்லை

ஒரு ஊரில் ஒரு குட்டிப்பறவை இருந்தது. அது பல இடங்களுக்கும் உணவு தேடி பறந்தது. ஓரிடத்தில், ஒரே ஒரு புழு சுற்றிக்கொண்டிருந்தது. பறவை அதைக் கொத்த முயன்ற போது, புழு பறவையிடம், என்னை மட்டும் சாப்பிட்டு விட்டால், உன் பசி தீர்ந்து விடுமா? சற்று தூரத்தில் நாற்பது, ஐம்பது புழுக்கள் இருக்கின்றன. கொஞ்ச தூரம் பறந்து சென்றால் அவற்றையும் சேர்த்து சாப்பிடலாம், என்றது. இரக்கமில்லாத அந்தப் பறவை, எப்போதோ கிடைக்கப் போகும் நாற்பது, ஐம்பது புழுக்களுக்காக, உன்னையும் விட்டு விட்டால் என்னாகும்? இப்போது, உன்னைத் தின்று பசியாறிக் கொள்கிறேன். பிறகு என் வழியில் நான் செல்கிறேன், என்று சொல்லி, புழுவை விழுங்கி விட்டது.


கொஞ்ச தூரம் பறந்து சென்று ஓரிடத்தில் அமர்ந்தது. அது அமர்ந்த இடம் ஒரு வலை. அதில் இருந்து மீள முடியவில்லை. வேடன் அதை தூக்க வந்தான். பறவை அவனிடம், வேடனே! நான் சாதாரண குஞ்சுப்பறவை. என்னிடம் என்ன இறைச்சி இருக்கும்! என்னுடன் வா! என் இருப்பிடத்தில் பல கொழுத்த பறவைகள் உள்ளன. அவற்றைப் பிடித்துச் சென்றால், உனக்கு நிறைய இறைச்சி கிடைக்கும் என்று சொல்லி தப்பிக்கப் பார்த்தது. அட பறவையே! நாளை கிடைக்கப்போகும் பலாக்காய்க்காக, இன்று கிடைக்கும் கிளாக்காயை எவனாவது விடுவானா? ஹூம்... இன்றைய உணவையே நான் பார்க்கிறேன், நாளைக்குரியதை, அந்த நாராயணன் பார்த்துக் கொள்வான், என்றவன், பறவையின் கழுத்தை திருகி விட்டான்.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.
செய்திச்சுருக்கம்.


🔮கடந்த 2 மாதங்களில் பெய்த மழை காரணமாக தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் 3 மீட்டர் அளவிற்கு உயர்ந்து உள்ளது.

🔮தமிழகம் முழுவதும் 'ஸ்மார்ட் சிட்டி' பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது -முதலமைச்சர் பழனிசாமி.

🔮ஜிம்பாப்வேயில் நிலவும் கடுமையான வறட்சியால், அந்நாட்டில் உள்ள வாங்கே தேசிய பூங்காவில் 200க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்தன.

🔮ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் பி.வி. சிந்து வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.


🔮அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் தமிழ் மன்றங்கள் தொடங்க முயற்சி மேற்கொள்ளப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர்.

🔮அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

HEADLINES

🔮Retail inflation jumps to 4.62% in October due to higher food prices.

🔮Supreme Court opens CJI office to RTI.

🔮SC panel orders closure of Delhi-NCR schools till November 15.

🔮Punjab CM Amarinder asks ‘cash-rich’ SGPC to pay USD 20 fees for Kartarpur Corridor.

🔮Garbage dropped by India, China, Russia in sea is floating into Los Angeles: Donald Trump.


🔮Sindhu wins; Saina, Sameer bow out of Hong Kong Open.


No comments:

Post a Comment