காதுகளில் உள்ள தண்ணீரை அகற்ற மக்கள் பயன்படுத்தும் பொதுவான முறைகளில் ஒன்று தலையை அசைப்பது. காதுகளில் தண்ணீர் தேங்குவதால் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால், நீரை அகற்ற வேண்டியது அவசியம். ஆனால், அதற்காக, காதில் உள்ள நீரை அகற்ற குழந்தைகள் தலையை அசைப்பது அவர்களின் மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
அமெரிக்காவின் கர்னெல் பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவின் வர்ஜீனியா தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்கள் இதுகுறித்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர். குழந்தைகள் மற்றும் பெரியவர்களிடம் இதுதொடர்பான ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளப்பட்டுள்ளது.
கண்ணாடி குழாய்கள் மற்றும் 3டி அச்சிடப்பட்ட காது கால்வாய்களில் நடத்தப்பட்ட சோதனையில், குழந்தைகளின் காதுகளில் உள்ள ஈர்ப்பு விசையானது வழக்கத்தை விட 10 மடங்கு அதிகமாக உள்ளது. அதாவது காதில் உள்ள நீரை வெளியேற்ற முடுக்கப்படுகிறது.
அப்போது காதில் உள்ள திரவத்தின் மேற்பரப்பு அதிக அதிர்வுடன் காணப்படுகிறது. இதனால், காதில் நீர் இருக்கும் போது தலையை அசைத்தால் மூளையின் செயல்திறன் குறைய வாய்ப்புள்ளது.
காதின் விட்ட அளவிற்கும் உள்ளே இருக்கும் நீரின் அளவிற்கும் ஏற்ப இது மாறுபடும்.

ஆல்கஹால் அல்லது வினிகர் போன்ற நீரை விட குறைந்த மேற்பரப்பு பதற்றம் கொண்ட ஒரு திரவத்தின் சில துளிகளை காதில் விடுவதன் மூலமாக மேற்பரப்பு பதற்றம் குறைந்து நீர் தானாக வெளியாகி விடும்.
No comments:
Post a Comment