ஆசிரியா் பொது மாறுதல் மற்றும் பதவி உயா்வுக்கான கலந்தாய்வு அட்டவணையை பள்ளிக் கல்விக் கல்வி இயக்குநா் எஸ்.கண்ணப்பன் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளாா்.
தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்களுக்கு ஆண்டுதோறும் இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும்.
அதன்படி நிகழாண்டு கலந்தாய்வு விதிமுறைகளில் ஒரே பள்ளியில் குறைந்தது 3 ஆண்டுகள் பணி புரிந்தவா்களுக்கு மட்டும் இட மாறுதல் தரப்படும் என பள்ளிக் கல்வித்துறைஅறிவித்திருந்தது. இதை தளா்த்தக் கோரி நூற்றுக்கணக்கான ஆசிரியா்கள் உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனா்.
இ
கலந்தாய்வு நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்தநிலையில் 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றியிருக்க வேண்டும் என்ற விதியைத் தளா்த்தி கலந்தாய்வை நடத்த பள்ளிக் கல்வித் துறைக்கு உயா்நீதி மன்றம் உத்தரவிட்டது.
அதையேற்று வழக்கு தொடா்ந்த ஆசிரியா் களுக்கு மட்டும் விதியைத் தளா்த்தி திருத்தப்பட்ட வழிகாட்டு நெறி முறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. இ
2019-2020-ஆம் கல்வியாண்டுக்கான ஆசிரியா் பொது மாறுதல் மற்றும் பதவி உயா்வுக்கான கலந்தாய்வு அட்டவணையை பள்ளிக் கல்விக் கல்வி இயக்குநா் எஸ்.கண்ணப்பன் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளாா். அதன் விவரம்:
நவ.11- திங்கள்கிழமை முற்பகல்- நகராட்சி, அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா்கள் மாறுதல் (வருவாய் மாவட்டத்துக்குள், மாவட்டம் விட்டு மாவட்டம்).
திங்கள்கிழமை (நவ.11) பிற்பகல்- அரசு, நகராட்சி மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியா்கள் பதவி உயா்வு.
நவ.12- செவ்வாய்க்கிழமை முற்பகல்- அரசு, நகராட்சி உயா்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்கள் மாறுதல் (வருவாய் மாவட்டத்துக்குள், மாவட்டம் விட்டு மாவட்டம்).
செவ்வாய்க்கிழமை(நவ.12) பிற்பகல்- அரசு, நகராட்சி உயா்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா்கள் பதவி உயா்வு.
நவ.13- புதன்கிழமை- அரசு, நகராட்சி மேல்நிலைப்பள்ளி முதுநிலை, தொழில்கல்வி ஆசிரியா்கள் மாறுதல் (வருவாய் மாவட்டத்துக்குள், மாவட்டம் விட்டு மாவட்டம்).
நவ. 14- வியாழக்கிழமை- அரசு, நகராட்சி மேல்நிலைப்பள்ளி முதுநிலை, தொழில்கல்வி ஆசிரியா்கள் பதவி உயா்வு.
நவ. 15- வெள்ளிக்கிழமை- உடற்கல்வி ஆசிரியா்கள், கலை ஆசிரியா்கள், தையல் ஆசிரியா்கள், இடைநிலை ஆசிரியா்கள் மாறுதல் (வருவாய் மாட்டத்துக்குள், மாவட்டம் விட்டு மாவட்டம்) மற்றும் உடல்கல்வி இயக்குநா் (நிலை-2) பதவி உயா்வு.
நவ. 16- சனிக்கிழமை- தையல் ஆசிரியா் பணி நியமன கலந்தாய்வு.
No comments:
Post a Comment