குழந்தைகள் தினம் ! இப்படியும் கொண்டாடலாம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, November 11, 2019

குழந்தைகள் தினம் ! இப்படியும் கொண்டாடலாம்

இன்றைய டிஜிட்டல் கல்வி முறையில் பாடப்புத்தகத்தையே படம் போட்டு கற்பித்து வரும் இவ்வேளையில், சினிமா வையே ஒரு கலையாக குழந்தைகளுக்கு கற்பித்து வருகிறது ஓர் அரசுப்பள்ளி.


பூலுவபட்டி மாநகராட்சி துவக்கப்பள்ளியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குழந்தைகளுக்கான சர்வதேச திரைப்பட விழாவை நடத்தியுள்ளது.


 சர்வதேச குறும்பட இயக்குனர் தாண்டவகோன் இயக்கிய படங்கள் உட்பட, 32 திரைப்படங்கள், ஐந்து திரைகளில் பள்ளியில் படிக்கும், 610 மாணவருக்கும் காண்பிக்கப்பட்டது.


 இதில், பன்னாட்டு படங்களும், 12 குறும்படங்களும் அடக்கம். பிறமொழி படங்களில், 'சில்ரன் ஆப் ஹெவன், லைப் ஆப் பை, சைல்டு, பாட்டில், கிரா, எல் எம்பலியோ, ப்ளையிங் புக்ஸ், டியூயல், சைல்டு லேபர், ஷூ, தாய்லாந்து குறும்படங்கள், மேஸ்ட்ரோ, மைம், ஓ ஷீப், ரீடு மி, ஸ்மோக்கிங் கில்ஸ், தி வால், தி சைலன்ட் சைல்டு, கலர் பிஷ், பிளாக் ஹோல், பர்னோ அண்ட் ஜூலியட் உள்ளிட்ட படங்களும் திரையிடப்பட்டது


தவிர, முதல் மார்க், பார் சைக்கிள், மீன், காத்து என்ன விலை, பசி, திங்கள், புழுகினி, தப்புக்கணக்கு, அமளிதுமிளி, சோசியல் மீடியா சுப்பிரமணி, மேன், உள்ளிட்ட குறும்படங்கள் காட்டப்பட்டன. வகுப்பிற்கு இரு ஆசிரியர்கள் படத்தினை விளக்கினர். ஒவ்வொரு பட முடிவிலும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. மாணவர்கள் உற்சாகத்துடன் கலந்துகொண்டு பதிலளித்தனர்.


பாடல், சண்டைகாட்சி, விறுவிறுப்பு இல்லாது படங்களை பார்ப்பது, வித்தியாசமான அனுபவமாய் இருந்ததாக, குழந்தைகள் தெரிவித்தனர்.


 பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்ய ஜாஸ்மின் மாலா கூறும்போது:


 குழந்தைகளின் மன உலகை, விருப்பங்களை, கனவுகளை காட்சிப்படுத்தும், குழந்தைகளின் கண்களின் வழியே உலகம் எப்படி தென்படுகிறது என்பதை விவரிக்கும், சிறார்களின் உலகையை அழகாக வெளிப்படுத்தும் படங்கள் ஏராளமாக உள்ளன.



குழந்தைகள் தினத்தன்று வெளிநாடுகளிலும் மட்டுமே குழந்தைகளுக்கான திரைப்பட விழாக்கள் நடக்கும். நம்மூரில் இதற்கு முக்கியத்துவம் தருவதில்லை.

இருப்பினும், கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த திரைப்பட விழாவை குழந்தைகள் தினத்திற்காக நடத்தி வருகிறோம்.


இது பெற்றோரிடமும், மாணவர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நல்ல திரைப்படம் மாணவர்களிடையே நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். ஆசிரியர் எர்னஸ்ட் ரிச்சர்ட் இதற்கான ஏற்பாடுகளை செய்தார். இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment