வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் மேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் நடத்தப்படும் என்று தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பித்துள்ளது.
தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. காலை 11 மணிக்குத் தொடங்கிய கூட்டம் சுமாா் ஒரு மணி நேரம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், உயா்கல்வி, தொழில், உள்ளாட்சி ஆகிய துறைகளில் முக்கிய முடிவுகளை எடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
தமிழகத்தில் உள்ளாட்சித் நடத்துவதற்கான பணிகளை மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இந்தத் குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.குறிப்பாக, மேயா், நகராட்சித் தலைவா், பேரூராட்சித் தலைவா் ஆகிய பதவிகளுக்கு மறைமுகத் தோதல் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுதொடர்பாக சட்ட மசோதா கொண்டு வருவது எனவும், அதற்கு ஆளுநரின் ஒப்புதலைப் பெற்று செயல்படுத்துவது பற்றியும் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறத
இந்நிலையில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் மேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் நடத்தப்படும் என்று தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பித்துள்ளது.
தமிழக அரசு பிறப்பித்துள்ள அவசரச் சட்டத்தில் மேயர் பதவி மட்டுமின்றி நகராட்சித் தலைவர், மற்றும் பேரூராட்சி தலைவர் ஆகிய பதவிகளுக்கும் மறைமுகத் தேர்தல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் மூலம் மேயர், நகராட்சித் தலைவர் மற்றும் பேரூராட்சி தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர் என்றும் அதில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்தப் பதவிகளுக்கு 1986 முதல் 2001ஆம் ஆண்டு வரை நேரடி தேர்தல் முறையும், மறைமுக தேர்தல் முறையும் நடைமுறையில் இருந்தது. பின்னர் மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு 2011ஆம் ஆண்டில் மீண்டும் நேரடித் தேர்தல் முறை கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment