ஆசிரியர் பணி பட்டியல் அநீதி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, November 24, 2019

ஆசிரியர் பணி பட்டியல் அநீதி

ஆசிரியர் பணிக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டோரின் பட்டியலில், மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு, அநீதி இழைக்கப் பட்டுள்ளது' என, பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி கூறியுள்ளார். 


இது குறித்து, அவரது அறிக்கை::தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் சார்பில், முதுநிலை ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு நடந்தது. இந்த தேர்வில், தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.வேதியியல் பாடத்திற்கான ஆசிரியர் தேர்வில், இட ஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்துவதில் நிகழ்ந்த குளறுபடிகள் காரணமாக, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு அநீதி இழைக்கப் பட்டுள்ளது.



தேர்வு பட்டியல் வெளியிடப்படாத தமிழ், பொருளாதாரம், வரலாறு, உயிரி வேதியியல் பாடங்களுக்கான ஆசிரியர் தேர்விலும், இதே போன்ற தவறுகள் நடந்திருக்க வாய்ப்புகள் உள்ளன. எனவே, அந்த பட்டியல்களையும் சரி பார்த்து வெளியிட, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அன்புமணி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment