இந்தியத் தேர்தல் வரலாற்றிலேயே இது முதன்முறை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, November 1, 2019

இந்தியத் தேர்தல் வரலாற்றிலேயே இது முதன்முறை

இந்தியத் தேர்தல் வரலாற்றிலேயே முதன்முறையாக, ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் புதிய வசதி ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது.


ஜார்க்கண்ட் மாநிலத்தில் தற்போது ரகுபர்தாஸ் தமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

ஜார்க்கண்ட் பேரவைத் தேர்தல் குறித்து புது தில்லியில் வெள்ளியன்று தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா செய்தியாளர்களிடம் அறிவித்தார். அதில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்றும், டிசம்பர் 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.அதன் விபரம் வருமாறு:


நவ.30 - 13 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல்

டிச.7 - 2ஆம் கட்ட தேர்தல்

டிச.12 - 3வது கட்ட தேர்தல்

டிச.16 - 4ஆம் கட்ட தேர்தல்

டிச.20 - 5ஆம் கட்ட தேர்தல்

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன.

இந்நிலையில் இந்தியத் தேர்தல் வரலாற்றிலேயே முதன்முறையாக, ஜார்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் புதிய வசதி ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது.


அதன்படி நாட்டிலேயே முதன்முறையாக வயதானவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தபால் வாக்கு முறையில் வாக்களிக்கும் வசதி ஜார்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் அறிமுகம் செய்யபப்ட்ட உள்ளது

இதுவரை காவலர்கள் மற்றும் தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு மட்டும்தான் தபால் வாக்கு முறையில் வாக்களிக்கும் வசதி இருந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment