அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, November 21, 2019

அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

 பள்ளிகளின் அலட்சியத்தால் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கும் பணியில் தாமதம் ஏற்பட்டு உள்ளது


.தமிழகத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. ஆண்டின் துவக்கத்தில் இந்த பாஸ் வழங்கப்படும்

. ஆனால் சில ஆண்டுகளாக இலவச பஸ் பாஸ் வழங்குவதற்கு காலதாமதம் ஏற்படுகிறது.மாணவர்களின் ரத்தப் பிரிவு பெற்றோர் பெயர் முகவரி உள்ளிட்ட விபரங்கள் பஸ் பாஸ் விண்ணப்பங்களில் அளிக்கப்பட வேண்டும். ஆனால் பல பள்ளிகளில் இந்த விபரங்களை சேகரிக்காமல் விட்டதால் பஸ் பாஸ் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது


.இது குறித்து அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அனுப்பியுள்ள சுற்றறிக்கை

:பெரும்பாலான பள்ளிகள் மாணவர்கள் விபரங்களை அனுப்பாமல் இருப்பதால் இலவச பஸ் பாஸ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது


. எனவே அந்தந்த மாவட்ட போக்குவரத்து அலுவலகங்களில் மாணவர்களின் விபரங்களை விரைந்து தாக்கல் செய்து இலவச பஸ் பாஸ் பெற்று மாணவர்களுக்கு வழங்க வேண்டும். இதில் காலதாமதம் செய்ய வேண்டாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment