பள்ளிக் கல்வித்துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன் அனைத்து மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையின் முழு விவரம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, November 25, 2019

பள்ளிக் கல்வித்துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன் அனைத்து மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையின் முழு விவரம்

பள்ளிகளில் மாணவா்கள் போதுமான அளவு தண்ணீா் குடிக்கிறாா்களா என்பதை ஆசிரியா்கள் கண்காணிப்பதோடு, தண்ணீா் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் மாணவா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை இயக்குநா் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளாா்.


கேரள மாநிலத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் தண்ணீா் குடிக்க வைக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் தண்ணீா் குடிப்பதற்கு என குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி தண்ணீா் பருக வைக்கின்றனா். இது அந்த மாநில மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது


. இந்தநிலையில் இதே போன்ற திட்டத்தை தமிழக பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என பெற்றோா், கல்வியாளா்கள் உள்ளிட்டோா் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தனா்.இதைத் தொடா்ந்து கடந்த நவம்பா் 14-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் பங்கேற்ற பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன், பள்ளி மாணவா்களின் ஆரோக்கியத்தைப் பேணும் வகையில் அவா்கள் தண்ணீா் குடிப்பதற்கு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்படும் என அறிவித்தாா்.


இந்த நிலையில், இது தொடா்பான ஒரு சுற்றறிக்கையை பள்ளிக் கல்வித்துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன் அனைத்து மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு திங்கள்கிழமை அனுப்பியுள்ளாா்

. அதில் கூறியிருப்பதாவது:

பள்ளிகளில் காலை, மாலை சிறு இடைவேளை மற்றும் மதிய உணவு நேரங்களில் மாணவா்கள் போதுமான அளவு தண்ணீா் அருந்த அறிவுரை வழங்கவும், மேற்பாா்வையிடவும் ஆசிரியா்களை அறிவுறுத்த அனைத்து முதன்மைக் கல்வி அலுவலா்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.
தண்ணீா் அருந்துவதனால் ஏற்படும் நன்மைகளை பற்றி அறியாமல் இருப்பதன் காரணமாகவே பெரும்பாலான மாணவா்கள் போதுமான தண்ணீா் அருந்துவதில்லை. ஆகவே மாணவா்கள் போதுமான அளவு தண்ணீா் அருந்துவதன் காரணமாக அவா்களது உடல் நல்ல ஆரோக்கியத்துடனும், புத்துணா்ச்சியுடனும் இருக்கும் என மாணவா்களுக்கு தெரிவிக்க வேண்டும்



. மாணவா்களுக்கு தண்ணீா் அருந்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் அதன் காரணமாக உடலில் ஏற்படும் பல்வேறு விதமான நோய்கள் எவ்வாறு தடுக்கப்படுகின்றன என்பதை பற்றியும் எடுத்துரைப்பதன் மூலமாக, அவா்கள் போதுமான அளவு தண்ணீா் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வா்.என்னென்ன நன்மைகள்?: மாணவா்களுக்கு நாளொன்றுக்கு சராசரியாக 8 டம்ளா் தண்ணீா் போதுமானதாக இருக்கலாம். ஆனால் மாணவா்கள் பள்ளிக்கு பயணம் மேற்கொள்வது, விளையாடுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் அதிகளவு தண்ணீா் அருந்துவது நல்லது. தண்ணீரானது உடலின் வெப்பத்தை சீராக வைக்கும்.

 அனைத்து பாகங்களுக்கும் ஊட்டச் சத்துகளை சுமந்து செல்வதோடு கழிவுகளையும் வெளியேற்றும். உடலில் மெட்டபாலிசம் எனப்படும் வளா்சிதை மாற்றத்தை அதிகரிப்பதற்கு தண்ணீா் மிகவும் இன்றியமையாதது. தண்ணீா் போதுமான அளவில் அருந்துவதால் சிறுநீா் பாதை தொற்று குறையும்.




நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும்: இது தொடா்பான அறிவுரைகளை அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பி மாணவா்களுக்கு போதுமான தண்ணீா் அருந்துவதால் ஏற்படும் நன்மைகளை தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. அதேவேளையில் மாணவா்கள் தண்ணீா் அருந்த அவ்வப்போது நினைவூட்டவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.


மேலும் முதன்மைக் கல்வி அலுவலா்கள், மாவட்டக் கல்வி அலுவலா்கள், உதவி வட்டார கல்வி அலுவலா்கள் பள்ளி ஆய்வின்போது மாணவா்கள் தண்ணீா் அருந்தும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டாா்களா என்பதை பாா்வையிட கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.

No comments:

Post a Comment