குடியரசுத் தலைவர் ஆட்சி என்றால், இந்தியாவில் உள்ள ஒரு மாநில அரசு ஏதேனும் ஒரு காரணத்தால் கலைக்கப்பட்டால் அல்லது ரத்து செய்யப்பட்டால் அங்கு மத்திய அரசின் கண்காணிப்பில் ஆட்சி நடைபெறும் என்பதை குறிப்பதாகும்.
இந்த வகையிலான ஆட்சிக்கு இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 356 வகை செய்கிறது. இந்த சட்டப்பிரிவின் படி, ஒரு மாநிலத்தில் அரசியலமைப்பு இயங்காமல் அல்லது ஆட்சியமைக்க முடியாத நிலையில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும்.
சட்டப்பேரவையில் பெரும்பான்மை பலம் நிரூபிக்கப்படாத நிலையில், அம்மாநிலத்தின் ஆளுநரே இது குறித்து முடிவெடுத்து மத்திய அரசுக்கு பரிந்துரைப்பார்.அவரது பரிந்துரையை ஏற்று மத்திய அரசு குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெற்றால், குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வரும்.
ஒரு மாநிலத்தில் முதல்வரின் கீழ் ஆட்சி நடைபெறாமல், குடியரசுத் தலைவரின் கீழ் ஆட்சி நடைபெறுவதால் குடியரசுத் தலைவர் ஆட்சி என்று கூறப்படுகிறது. ஆனால், குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட மாநிலத்தின் ஆளுநரே, ஆலோசகர்கள், ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளை நியமித்து மாநில ஆட்சியை வழிநடத்துவார். பொதுவாக மத்திய அரசின் கொள்கைகள் பின்பற்றப்படும்.
No comments:
Post a Comment