அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ - மாணவியருக்கு, இலவச சி.ஏ., பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக, பள்ளி கல்வி இயக்குனரகம் தெரிவித்து உள்ளது.
பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் வெளியிட்ட சுற்றறிக்கை:
அரசு மற்றும் அரசு உதவி பெறும், மேல்நிலை பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, இரண்டு ஆண்டுகளாக, &'நீட்&' தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. அதேபோல, சி.ஏ., என்ற, பட்டய கணக்காளர் தேர்வுக்கான வழிகாட்டும் பயிற்சியும் வழங்கப்பட உள்ளது.
இந்த பயிற்சியை, 32 மாவட்டங்களில் உள்ள மாணவர்களுக்கும் இலவசமாக வழங்க, இந்திய பட்டய கணக்காளர் நிறுவனமான, ஐ.சி.ஏ.ஐ., முன்வந்துள்ளது
.முதல் கட்டமாக, சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள, 70 பள்ளிகளின் மாணவ - மாணவியருக்கு இந்த பயிற்சி வழங்கப்பட உள்ளது
.டிசம்பரில் அரையாண்டு தேர்வு துவங்கும் முன், 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ - மாணவியர், இந்த பயிற்சியில் பங்கேற்கலாம். அதற்கான ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment