GST செலுத்துபவர்களுக்கு குலுக்கல் முறையில் தினந்தோறும் பரிசு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, November 27, 2019

GST செலுத்துபவர்களுக்கு குலுக்கல் முறையில் தினந்தோறும் பரிசு

ஜி.எஸ்.டி. செலுத்தும் நுகர்வோர்களுக்கு லாட்டரி முறையில் பரிசு வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.




இதன் மூலம் ஜி.எஸ்.டி. செலுத்துவதில் இருக்கும் முறைகேடுகள் தவிர்க்கப்படும் என்று நிதித் துறை அமைச்சக அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தின்படி, ஜிஎஸ்டி செலுத்திய ரசீது நகலை அதற்காக பிரத்தியேகமாக உருவாக்கப்படும் இணையதளத்தில் அல்லது செயலியில் நுகர்வோர்கள் பதிவு செய்ய வேண்டும். பதிவேற்றப்படும் நுகர்வோரின் ரசீதுகள் தானியங்கி முறையில் குலுக்கப்படும்.



நுகர்வோர் பதிவு செய்யும் செல்போன் எண், ரிசீதின் எண், ஜிஎஸ்டி எண் ஆகியவற்றைக் கொண்டு லாட்டரி முறையில் தினந்தோறும் மற்றும் மாதந்தோறும் குலுக்கல் முறையில் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பரிசு வழங்கப்படும்.

இந்த திட்டத்தில் குடிநீர் மற்றும் மின்சாரத்துக்கு செலுத்திய ஜிஎஸ்டி தவிர்த்து மற்ற அனைத்து ரசீதுகளையும் பதிவு செய்யலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


இந்த திட்டத்துக்கு ஒப்புதல் பெற்றதும், விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் நுகர்வோரிடம் இருந்து ஜிஎஸ்டி வசூலித்துவிட்டு, அதனை செலுத்தாத வர்த்தகர்களும் பிடிபடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே விஏடி வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்ட போது தில்லி அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது போன்றே இந்த லாட்டரி திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது.

No comments:

Post a Comment