இந்திய கடலியல் பல்கலையில், எம்.பி.ஏ., படிப்புக்கான நுழைவு தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்திய கடலியல் கல்வி பல்கலை, சென்னையில் செயல்படுகிறது. இந்த பல்கலையின் கீழ், மும்பை, கொச்சி உள்ளிட்ட இடங்களில், கல்லுாரிகள் உள்ளன. இங்கு, கடலியல் பாடம் தொடர்பாக, பி.இ., ~ பி.டெக்., ~ எம்.இ., ~ எம்.டெக்., ~ எம்.பி.ஏ., உள்ளிட்ட படிப்புகள் நடத்தப்படுகின்றன.
வரும் ஆண்டில், எம்.பி.ஏ., மாணவர் சேர்க்கை நுழைவு தேர்வு, ஜன., 4ல் நடத்தப்படும் என, கடலியல் பல்கலை நேற்று அறிவித்தது. தேர்வில் பங்கேற்க விரும்புவோர், நவ., 15 முதல், ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்; டிச., 2ல் ஆன்லைன் பதிவு முடிகிறது.
இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் பட்டதாரிகள், துறைமுகம், ஏற்றுமதி மேலாண்மை, சர்வதேச கடலியல் போக்குவரத்து மற்றும் சரக்கு கையாள்தல் தொடர்பாக, எம்.பி.ஏ., படிப்பில் சேரலாம். தேர்வின் கூடுதல் விபரங்களை, www.imu.edu.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:
Post a Comment