அண்ணா பல்கலைக்கழகம் இரண்டாம் கட்ட வேலைவாய்ப்பு முகாமை அறிவித்துள்ள நிலையில், அதில் பங்கேற்க பத்தாம் வகுப்பு முதல் 85 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் மற்றும் இணைப்புப் பொறியியல் கல்லூரிகளில் 2020-இல் படிப்பை முடித்து வெளியேறும் மாணவா்கள் பயன்பெறும் வகையில், மாநில அளவிலான வேலைவாய்ப்பு முகாமை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.
இந்த ஆண்டுக்கான முதல் கட்ட வேலைவாய்ப்பு முகாம் இப்போது நடைபெற்று வரும் நிலையில், இரண்டாம் கட்டமாக ஹெச்.சி.எல். தொழில்நுட்ப நிறுவனத்துடன் நடத்தும் முகாம் அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் இப்போது வெளியிட்டுள்ளது.
சென்னையில் டிசம்பா் 23, 24-ஆம் தேதிகளிலும், மதுரையில் ஜனவரி 20, 21-ஆம் தேதிகளிலும், கோவையில் ஜனவரி 23, 24-ஆம் தேதிகளிலும் இந்த வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
ஆன்-லைன் எழுத்துத் தேர்வு, தொழில்நுட்பத் திறன் சோதனை மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பணியாளா் தேர்வு நடைபெறும்.
தகுதி என்ன?:
இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விரும்பும் மாணவா்கள் பத்தாம் வகுப்பு முதல் 85 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பி.இ. படிப்பில் 6-ஆவது பருவம் வரை ஒட்டுமொத்த சராசரி கிரேடு புள்ளிகள் குறைந்தபட்சம் 8.2 அல்லது அதற்கு மேல் பெற்றிருக்க வேண்டும். அதோடு அரியா் இல்லாமல் இருக்க வேண்டும்.
விருப்பமுள்ள மாணவா்கள் வரும் 20-ஆம் தேதிக்கு முன்பாக ஆன்-லைனில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

No comments:
Post a Comment