கவனம்! பான் கார்டை இப்படி பயன்படுத்தினால் ரூ.10 ஆயிரம் அபராதம்! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, December 7, 2019

கவனம்! பான் கார்டை இப்படி பயன்படுத்தினால் ரூ.10 ஆயிரம் அபராதம்!

பான் கார்டை இப்படிப் பயன்படுத்தினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என வருமான வரித்துறையினர் அறிவித்துள்ளனர்.




முன்னதாக வெறும் வருமான வரி கணக்குகளுக்கு மட்டும் பயன்படுத்தப்பட்ட பான் கார்டு இப்போதெல்லாம் விலையுயர்ந்த பொருள் வாங்குவது முதல் கடன் வாங்குவது வரை என பல விஷயங்களுக்கும், ஏன்? அடையாள அட்டையாகவும் பயன்படுத்தப்படுகிறது


.பான் கார்டுவில் உள்ள பிரத்யேக நம்பரை மட்டுமே கொண்டு ஒருவரின் பெயரில் வாங்கப்பட்ட கடன் விவரங்கள், அவருக்கு எத்தனை வங்கி கணக்குகள் உள்ளன, சொத்து கைமாறியிருக்கும் விவரங்கள் என அனைத்தயும் பெற்றுவிட முடியும்.முன்னதாக பான் கார்டு இல்லையெனில் ஆதார் கார்டு நம்பரை வரி செலுத்த பயன்படுத்த முடியும் என அரசு அறிவித்திருந்தது.



அப்படி பான் இல்லாத பட்சத்தில் வரி தாக்கலுக்காக ஆதார் கார்டு நம்பரை பயன்பாடுத்தினால் அந்த பயன்பாட்டை விண்ணப்பமாக கருதி அரசே அந்த நபருக்கு பான் கார்டு தயார்செய்து கொடுக்கும் எனவும் கூறியிருந்தது.





இது போன்று பான் கார்டின் பல்வேறுபட்ட பயன்கள் அதிகரித்து அதன் அத்தியாவசியம் பெருகி நாளடைவில் தனி நபரின் முக்கிய அடையாள அட்டையாகவே மாறிவிட்டது. மக்களும் பான் கார்டுகளை விண்ணப்பித்து பெற்றுக்கொள்வதில் பெரிதும் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.


 பான் கார்டு பெறுவதில் கூட சாதனை செய்வதாகக் கருதி, சில பெற்றோர்கள் கருவில் இருக்கும் குழந்தைக்குக் கூட பான் கார்டு கோரி விண்ணப்பிக்கின்றனர் .2016ஆம் ஆண்டு பிகார் மாநிலத்தில் இது போன்ற முயற்சியில் தம்பதி ஈடுபட்டு தங்களுக்கு பிறந்த, 5 நாட்களே ஆன பெண் குழந்தை ஆஷிக்கு பான் கார்டு பெற்றுதந்தனர்.


 அக்குழந்தை பிரபலமடைந்தது மட்டுமின்றி கின்னஸ் சாதனை புத்தகத்திலும் பெயர் பெற்றது .இந்நிலையில், அரசு சம்பந்தபட்ட பதிவுகளிலோ, அல்லது வரி போன்ற விஷயங்களிலோ, பான் நம்பரை தப்பித்தவறி தவறாக அளித்தால் கூட ரூ. 10,000 அபராதம் விதிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. எனவே ஒவ்வொரு முறையும் பான் நம்பரை பயன்படுத்தும்போது அதனை ஒன்றிற்கு இரண்டு முறை சரிபார்த்து சமர்ப்பிக்கவும்.

Source:Asiaville Tamil

No comments:

Post a Comment