காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
11-12-2019
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றைய திருக்குறள்
குறள்எண்- 132
அதிகாரம் : ஒழுக்கமுடைமை
பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை.
மு.வ உரை:
ஒழுக்கத்தை வருந்தியும் போற்றிக் காக்க வேண்டும்; பலவற்றையும் ஆராய்ந்து போற்றித் தெளிந்தாலும், அந்த ஒழுக்கமே வாழ்க்கையில் துணையாக விளங்கும்.
கருணாநிதி உரை:
எந்தெந்த வழிகளில் ஆராய்ந்தாலும் வாழ்க்கையில் ஒழுக்கமே சிறந்த துணை என்பதால், எத்தகைய துன்பத்தை ஏற்றாவது அதைக் காக்க வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
எதனாலும், அழிந்து போகாமல் ஒழுக்கத்தை விரும்பிக் காத்துக்கொள்க; அறங்கள் பலவற்றையும் ஆய்ந்து, இம்மை மறுமைக்குத் துணையாவது எது எனத் தேர்வு செய்தால் ஒழுக்கமே துணையாகும்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி
கல்வியின் நோக்கம் , அக்கல்வியைக் கற்றிடும் மாணவர்களின் உள்ளங்கள் தமது வாழ்நாளெல்லாம் தமக்குத் தேவையான கல்வியைத் தொடர்ந்து சுயமாக தாமே கற்றிடும் திறமையுடையவர்களாக ஆக்குவது தான்.
- அப்துல் கலாம்
✡✡✡✡✡✡✡✡
பழமொழி
பழமொழி
Better an open enemy than a false friend
போலி நண்பனை விட நேரிடை எதிரி மேல்
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
Important Words
Important Words
1. Canvas - கித்தான் துணி
2. Capability - திறமை
3. Carton - அட்டைப்பெட்டி
4. Cascade - நீர்வீழ்ச்சி
✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு
பொதுஅறிவு
1. தொங்கும் இருப்புப்பாலம் எங்குள்ளது ?
கொல்கத்தா
2. எலிபெண்டா குகைகள் எங்குள்ளன ?
மும்பை
📫📫📫📫📫📫📫📫
விடுகதை
விடுகதை
1. கத்தி போல இலை இருக்கும், கவரிமான் பூ பூக்கும் , தின்ன பழம் கொடுக்கும், தின்னாத காய் கொடுக்கும், அது என்ன ?
வேம்பு
2. விடுமுறை இல்லாத கடை எது ?
சாக்கடை
✡✡✡✡✡✡✡✡
Daily English
Daily English
2. I play in the evening
3. I sleep at night.
அறிவோம்! கூறுவோம் !விவசாயம்!
பட்டாணி
🍊 பட்டாணி பருப்பு பொதுவாக உருளை வடிவத்தில் இருக்கும். இந்த விதைகள் அவரை போன்ற தோற்றத்தில் காணப்படும்.
🍊 பூக்களின் அண்டத்தில் இருந்து இவை உருவாவதால் இவற்றை தாவரவியலில் பழங்களாகவே கருதுகின்றனர். ஆனால் சமையல் கலையில் இவை காய்களாகவே பயன்படுகின்றன.
🍊 இவை பொதுவாக பச்சை பட்டாணி என அழைக்கப்படுகிறது.
🍊பல நாடுகளில் இவை உறைய வைக்கப்பட்ட நிலையிலும் விற்கப்படுகிறது.இவை ஓராண்டு தாவரமாகும்.
👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை
இன்றையகதை
நரி சொன்னப் பொய்
ஒரு நாள் காலையில் சேவலானது மரத்தின் மீது அமர்ந்து பலமுறைக் கூவிக் கொண்டே இருந்தது. சேவல் கூவும் சத்தத்தைக் கேட்ட நரி சேவல் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தது. நரியோ மிகுந்தப் பசியுடன் இருந்ததால் அந்த சேவலை பிடித்து சாப்பிட ஆசை ஏற்பட்டது. ஆனால் சேவலோ மரத்தின் மீது இருந்ததால் நரியால் மரத்தில் ஏறிப்பிடிக்க முடியவில்லை.
சேவலைப் பார்த்து, சகோதரனே!, வணக்கம். உனக்கு ஒரு நல்ல செய்தி. இனி பறவைகளுக்கும், மிருகங்களுக்கும் சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டுவிட்டது. நீ கொஞ்சம் கீழே வந்தால் இதை பற்றித் தெளிவாக பேசுவோம் என்றது. நரியின் தந்திரப் பேச்சைச் சேவல் புரிந்து கொண்டு தூரத்தில் எதையோ பார்ப்பதைப் போல் தலையைத் தூக்கிப் பார்த்தது.
அதைக் கண்ட நரி, என்ன சகோதரா!, எதையோ அடிக்கடி எட்டிப் பார்க்கிறாயே. அங்கே என்ன இருக்கிறது? என்று கேட்டது. அதற்குச் சேவல், அங்கே சில வேட்டை நாய்கள் வருவது மாதிரி தெரிகிறது. வேட்டை நாய்கள் தானா என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்றது. வேட்டை நாய்கள் என்றதும் நரி வேகவேகமாக சரி, சரி நான் அப்புறமாக வந்து உன்னிடம் பேசுகிறேன் என்று கூறி கிளம்பியது.
சேவல், அருமை சகோதரா, போகாதே, நான் இப்பொழுதே கீழே இறங்கி வருகிறேன். ஏன் நாய்களைக் கண்டு பயப்படுகிறாய்? இப்பொழுது தானே நீ சொன்னாய், எல்லோருக்கும் இடையே சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது என்று கேட்டது சேவல். அதற்கு நரி அந்த ஒப்பந்தத்தைப் பற்றி நிறைய பேர் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். ஒருவேளை அந்த நாய்களுக்குத் தெரியாமல் இருந்தால், என் நிலைமை என்னவாகும்? அதனால் நான் போகிறேன் என்று சொல்லிவிட்டு நரி ஒரே ஓட்டமாக ஓடி காட்டுக்குள் மறைந்தது. சேவல் யாரை ஏமாற்றப் பார்த்தாய், உன்னுடைய கெட்டிக்காரத் தனமானப் பொய்கள் என்னிடம் பலிக்காது என்று கூறி சிரித்தது.
நீதி :
புத்திசாலிகளை யாரும் சீக்கிரத்தில் ஏமாற்ற முடியாது.
தொகுப்பு:
T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.
T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.
செய்திச்சுருக்கம்
🔮திருவண்ணாமலை கோவிலில் பக்தர்கள் கரகோசத்துடன் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
🔮பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட்டுக்கான கவுண்ட்டவுன் தொடங்கியது.
நாளை விண்ணில் ஏவப்படும்.
🔮மத்திய அரசு 2 ஆயிரம் ரூபாய் நோட்டை திரும்பப் பெறும் திட்டம் ஏதும் இல்லை என்று மத்திய நிதி இணை மந்திரி அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
🔮தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலம் சென்னை, மதுரையில் கட்டப்பட்ட 610 குடியிருப்புகளை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்
🔮13வது தெற்காசிய விளையாட்டு போட்டியில் இந்தியா இன்று 300வது பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.

HEADLINES
🔮U.S. Democrats announce impeachment charges against Trump.
🔮Ethiopia Prime Minister Abiy Ahmed hails role of Eritrea as he receives Nobel Peace Prize.
🔮3rd T20: Kohli’s men should get their act together to avoid series loss.
🔮Eight-month-old baby falls from fifth floor, survives with leg fracture in Chennai.

No comments:
Post a Comment