திறன் மேம்பாட்டு தேர்வு;15ல் நடக்கிறது - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, December 10, 2019

திறன் மேம்பாட்டு தேர்வு;15ல் நடக்கிறது

பருவ மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேசிய திறன்மேம்பாட்டு தேர்வு, வரும் 15ம் தேதி நடக்கிறது.


அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவருக்கு, 'என்.எம்.எம்.எஸ்.,' எனும் தேசிய திறன்மேம்பாட்டு தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. நடப்பாண்டு, திருப்பூர் மாவட்டத்தில், 4 ஆயிரத்து, 926 பேர் விண்ணப்பித்துள்ளனர்.


 கடந்த டிச., 1ம் தேதி நடக்கவிருந்த இத்தேர்வு, தொடர் கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. தற்போது தேர்வு டிச., 15ம் தேதி நடத்தப்படும் என, அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.



இந்நிலையில், இதற்கான ஹால்டிக்கெட், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

 சம்பந்தப்பட்ட பள்ளி முதல்வர் அல்லது தலைமை ஆசிரியர்கள் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து, தேர்வு எழுதும் தங்கள் மாணவருக்கு வினியோகிக்கலாம் என, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் கூறினார்.

No comments:

Post a Comment