காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
17-12-2019
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றைய திருக்குறள்
குறள்எண்- 603
அதிகாரம் : மடியின்மை
மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியும் தன்னினும் முந்து.
பொருள்:
விட்டுவிட வேண்டிய சோம்பலைத் தனக்குள்ளே கொண்டு வாழும் அறிவற்றவன் பிறந்த குடும்பம் அவனுக்கும் முன்பே அழிந்துவிடும்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி
மூச்சுப் பிடிக்காமல் முத்து குளிக்க முடியாது.
- வெ. இறையன்பு
✡✡✡✡✡✡✡✡
பழமொழி
A contended mind is a continual feet
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
Important Words
1. Disuse - பண்பாடின்மை
2. Ditch - குழி, பள்ளம்
3. Divide - பகுதிகளாகப் பிரி
4. Divine - புனிதமான
✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு
1. அதிக ஞாபக சக்தி கொண்ட விலங்கு எது ?
யானை
2. உடலில் இரத்தம் பாயாத பகுதி எது ?
கருவிழி
📫📫📫📫📫📫📫📫
விடுகதை
1. தான் இருந்தால் பிறரை இருக்க விட மாட்டான். அவன் யார் ?
ஓட்டை
2. வாயைத் திறந்தால் முத்து உதிரும், அது என்ன ?
மாதுளம் பழம்
✡✡✡✡✡✡✡✡
Daily English
1. My father is in his office
2. We speak English here.
3. Don't drink and drive.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !
மரவள்ளி கிழங்கு
🍠 மரவள்ளி கிழங்கினை குச்சிக் கிழங்கு, குச்சிவள்ளிக் கிழங்கு, மரச்சினி கிழங்கு எனக் கூறுவார்கள்.
🍠 தென் அமெரிக்காவையும், மேற்கு ஆப்பிரிக்காவையும் தாயகமாகக் கொண்ட இச்செடி இன்று ஆப்பிரிக்காவில் அதிகம் பயிர் செய்யப்படுகிறது.
🍠 மரவள்ளி கிழங்கு இந்தியாவில் 17-ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கீசியர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது.
🍠 நைஜீரியா இன்று உலகின் மிகப்பெரிய மரவள்ளி உற்பத்தி செய்யும் நாடாக உள்ளது.
இன்றையகதை
வெட்டுக்கிளியும் ஆந்தையும்
ஒரு நாள் ஒரு ஆந்தை அங்குள்ள ஒரு மரத்தின் மரப்பொந்தில் தூங்கிக் கொண்டிருந்தது. கீழே புல்தரையில் வெட்டுக்கிளி பாட்டுப்பாடிக் கொண்டிருக்கும் சத்தத்தை பொருத்துக் கொள்ள முடியாத ஆந்தை வெட்டுக்கிளியிடம் கொஞ்சம் பாடுவதை நிறுத்தும்படி கேட்டது. வெட்டுக்கிளி ஆந்தையைப் பார்த்து நீ ஒரு குருட்டு ஆந்தை. பகலில் வெளியே வராமல் இரவில் எல்லோரும் தூங்கிய பின்புதான் நீ வெளியே வருவாய் நீ என்ன யோக்கியவானா என்று திட்டியது.
ஆந்தை தன்னுடையத் தந்திரத்தினால்தான் வெட்டுக்கிளியை அடக்க வேண்டும் என்று நினைத்து உன் குரல் மிகவும் இனிமையாக இருக்கிறது. அது இன்னும் தேவகானம் போல் ஒலிப்பதற்கு என்னிடம் ஒரு அமிர்தம் இருக்கிறது. அதில் இரண்டு துளி நீ சாப்பிட்டால் போதும், உன் குரலும் அமிர்தமாய் மாறிவிடும். மேலே வந்தால் உனக்கு நான் தருகிறேன் என்றது. ஆந்தை பேச்சைக் கேட்டு ஏமாந்த வெட்டுக்கிளி மரத்தில் ஏறி ஆந்தையின் பக்கத்தில் சென்றது. வந்த வெட்டுக்கிளியை ஆந்தை பிடித்து நசுக்கிக் கொன்றது.
நீதி :
பிறருக்கு தொந்தரவு செய்தல் கூடாது
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.
செய்திச்சுருக்கம்.
🔮அனைத்து துறைகளிலும் நேர்மை, வெளிப்படைத் தன்மை வந்தால் மட்டுமே அப்துல் கலாமின் கனவு சாத்தியமாகும் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூறியுள்ளார்.
🔮இந்தியக் குடியுரிமை தானாக யாருக்கும் வழங்கப்படாது என்று உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.
🔮அமெரிக்க பொருட்கள் மீதான கூடுதல் வரிவிதிப்பினை ரத்து செய்வதாக சீனா அறிவித்துள்ளது.
🔮தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
🔮வங்காளதேச பேட்மிண்டன் போட்டியில், இந்திய வீரர் லக்ஷயா சாம்பியன் பட்டம் வென்றார்.
🔮திருப்பதியில் ஜனவரி 1-ம் தேதி முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என காவல் கண்காணிப்பாளர் கூறியுள்ளார்.
HEADLINES
🔮17th Century inscription, snake sculpture found in Tamil Nadu.
🔮Stay away from violence and maintain peace on campuses: HRD Minister to students.
🔮Delhi metro stations closed in view of protests at India Gate, Jantar Mantar.
🔮Donald Trump poised to become third U.S. president to be impeached.

No comments:
Post a Comment