குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு டிசம்பர் 23-ம் தேதிவரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
நாடு முழுவதும் போராட்டம்:
குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டதை அடுத்து வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இச்சட்டத்தை எதிர்த்து தொடர்ச்சியாக போராட்டங்கள்
நடைபெற்று வருகின்றன.
டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள், இந்த விவகாரம் தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை மாலை போராட்டத்தில் ஈடுபட்டனர். போரட்டத்தின்போது, பேருந்துகள், போலீஸ் வாகனங்கள் சிலவும் தீவைத்து எரிக்கப்பட்டன
. அந்தப் போராட்டத்தில் வன்முறை வெடித்த நிலையில், அதைக் கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர்ப்புகை குண்டு வீசியும், தடியடி நடத்தியும் கலைத்தனர்.
இதையடுத்து, பல்கலைக்கழக வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்த போலீசார், மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். பல்கலைக்கழக நிர்வாகிகளின் அனுமதியின்றி வளாகத்துக்குள் நுழைந்த போலீசார், நூலகம், விடுதிகள் மற்றும் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த மசூதி ஆகியவற்றில் இருந்த மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
வன்முறை தொடர்பாக ஏற்கனவே குற்றப் பின்னணி உடைய 10 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், சமூக விரோத சக்திகள் கண்காணிக்கப்பட்டு வருதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் முடிவுக்கு வந்த நிலையில் மீண்டும் போராட்டம் வெடித்துள்ளது.
கிழக்கு டெல்லியில் உள்ள சீலாம்பூரில் சில வாகனங்களை போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்ததால் பதற்றம் நிலவி வருகிறது.
சென்னை பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை:
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லியிலுள்ள ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டத்தில் சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் அந்த வளாகத்தில் இந்தியாவின் பல மாநிலங்களைச் சேர்ந்த வெவ்வேறு மொழி பேசும் சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
சுமார் 150-க்கும் மேற்பட்டோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில் போராட்டத்தில் ஈடுபட்ட சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் கார்த்திகேயன், சுப்பையா ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்தநிலையில், சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு டிசம்பர் 23-ம் தேதிவரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து போராட்டம் நடைபெற்ற நிலையில் பல்கலைக்கழகத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை நாட்களை தொடர்ந்து, பல்கலைக்கழகத்துக்கு ஜனவரி 2-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், விடுதியை உடனே காலி செய்யவும் சென்னை பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.
பல்கலைக்கழகத்துக்கு ஏற்கெனவே, கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு டிசம்பா் 24 முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
இப்போது, டிசம்பா் 18 முதல் 23-ஆம் தேதி வரை வகுப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பு அந்தந்த துறைத் தலைவா்கள் மூலம் மாணவா்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக நிா்வாகப் பணிகள் தொடா்ந்து நடைபெறும். இந்த விடுமுறை அறிவிப்பு மாணவா்களுக்கு மட்டும்தான் எனவும் பேராசிரியா்கள் தெரிவித்தனா்

No comments:
Post a Comment