தமிழக அரசில் கால்நடை ஆய்வாளர் வேலை: பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, December 11, 2019

தமிழக அரசில் கால்நடை ஆய்வாளர் வேலை: பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

தமிழக அரசின் கால்நடை பராமரிப்புயில் காலியாக 583 கால்நடை ஆய்வாளர் நிலை-II பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: கால்நடை ஆய்வாளர் நிலை-II

காலியிடங்கள்: 583

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும். 11 மாத கால்நடை ஆய்வாளர் பயிற்சி முடித்த பின் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு கால்நடை ஆய்வாளர் நிலை-2 ஆக பணி நியமனம் வழங்கப்படும். பயிற்சி காலத்தில் சம்பளம், உதவித்தொகை வழங்கப்பட மாட்டாது.


வயதுவரம்பு: பொது பிரிவினர் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் 30 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். மற்ற பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் 46 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

www.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் சான்றிதழ் நகல்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வுக் கட்டணம்:

ரூ.100, இதனை The Director, Animal Husbandry and Veterinary services, Chennai-35 என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், விதவைகள், திருநங்கைகள் தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும்.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:



இயக்குநர், கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப்பணிகள் , எண் 571, அண்ணாசாலை, நந்தனம். சென்னை - 35 என்ற முகவரிக்கு நேரிலோ, அஞ்சல் மூலமோ கிடைக்கும்படி அனுப்ப வேண்டும்.


மேலும் முழுமையான விவரங்கள் அறிய
https://cms.tn.gov.in/sites/default/files/announcement/LI_notification_021219_0.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.12.2019

No comments:

Post a Comment