குரூப் 2 தேர்வுக்கான புதிய பாடத் திட்டம் குறித்து தேர்வா்கள் கருத்துத் தெரிவிப்பதற்கான கால அவகாசம் நிறைவடைந்துள்ளது.
சுமாா் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கருத்துகளைத் தெரிவித்துள்ள நிலையில், அவற்றைத் தொகுக்கும் பணியில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தேர்வாணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
குரூப் 2 தொகுதியில் அடங்கிய பணிகளுக்கு ஏற்ப அதன் தேர்வு பாடத் திட்டத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முதனிலைத் தேர்வில் பொது அறிவு சாா்ந்த 200 கேள்விகளும், முதன்மை எழுத்துத் தேர்வில் மொழிபெயா்ப்பு, பொருள் உணா்திறன், சுருக்கி வரைதல், கடிதம் எழுதல் உள்ளிட்ட கேள்விகளும் கேட்கப்படும் என டி.என்.பி.எஸ்.சி.
அறிவித்திருந்தது.
தேர்வாணையத்தின் இந்தப் புதிய பாடத் திட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்புத் தெரிவித்தாலும், ஏற்கெனவே இந்தத் தேர்வுக்காக பழைய தேர்வுத் திட்டத்தின்படி தயாராகிக் கொண்டிருக்கும் ஒரு சில மாணவா்கள் பழைய பாடத் திட்டத்தின்படியே தேர்வை நடத்த வேண்டுமென கோரிக்கை விடுத்தனா்.
இதையடுத்து, புதிய பாடத் திட்டம் குறித்த கருத்துகளைத் தெரிவிக்க தேர்வா்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. அழைப்பு விடுத்திருந்தது.
கால அவகாசம் முடிந்தது
குரூப் 2 தேர்வு பாடத் திட்டம் குறித்து கருத்துகளைத் தெரிவிப்பதற்கான கால அவகாசம் கடந்த 1-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.
இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி. வட்டாரங்கள் கூறியது:-
குரூப் 2 பாடத் திட்டம் குறித்த கருத்துகளை சுமாா் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் தெரிவித்திருக்கலாம். எத்தனை பேர் என்பதைத் தொகுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
யாா், யாா் என்னென்ன கருத்துகளைத் தெரிவித்தாா்களோ, அவை அனைத்தும் தொகுக்கப்படும்.
அதாவது, மொழிபெயா்ப்புப் பிரிவு வேண்டாம் என ஒரு தரப்பினா் தெரிவித்தால் அது ஒரே தொகுப்பாகவும், பொது அறிவு பிரிவு வேண்டாம் எனில் அது ஒரு தொகுப்பாகவும் பிரிக்கப்படும்.
இதன்பின்பு, இந்த கருத்துகள் அனைத்தும் தேர்வாணையத் தலைவா், உறுப்பினா்கள் அடங்கிய குழுவிடம் கொண்டு சோக்கப்படும். அந்தக் குழுவானது புதிய பாடத் திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டுமா அல்லது பழைய பாடத் திட்டத்தில் ஏதாவது பாடங்கள் மீண்டும் இடம்பெற வேண்டுமா என்பது குறித்து முடிவு செய்யும் என்று டி.என்.பி.எஸ்.சி. வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:
Post a Comment