5 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, December 12, 2019

5 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை

வளிமண்டல சுழற்சி காரணமாக, ஐந்து மாவட்டங்களில் கன மழை பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.



வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் அளித்த பேட்டி:தென் மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கும், உள் மாவட்டங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளது.


சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்; சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, கடலுார், புதுக்கோட்டை மாவட்டங்களில், சில இடங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்புள்ளது.



வட கிழக்கு பருவ மழை, இந்த மாதம் வரை பெய்யும். வட கிழக்கு பருவ மழை காலமான, அக்., முதல், டிச., வரை, தமிழகத்தில் சராசரியாக, 44 செ.மீ., மழை பெய்யும். நேற்று வரை, 43 செ.மீ., பெய்துள்ளது.சென்னையில், இதுவரை சராசரியாக, 68 செ.மீ., மழை பெய்திருக்க வேண்டும். ஆனால், 15 சதவீதம் குறைவாக, 58 செ.மீ., மட்டுமே பெய்துள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment