8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: வினா வடிவம் மற்றும் மாதிரி வினாத்தாள் குறித்து தெரியாமல் தடுமாறும் நிலை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, December 12, 2019

8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: வினா வடிவம் மற்றும் மாதிரி வினாத்தாள் குறித்து தெரியாமல் தடுமாறும் நிலை

விரைவில் பொதுத் தேர்வை எதிா்கொள்ள உள்ள 8ஆம் வகுப்பு மாணவா்கள் மட்டுமின்றி, வழிகாட்ட வேண்டிய ஆசிரியா்களும் வினா வடிவம் மற்றும் மாதிரி வினாத்தாள் குறித்து தெரியாமல் தடுமாறும் நிலை ஏற்பட்டுள்ளது.


தமிழகம் முழுவதும் முதல் முறையாக 2019-20 ஆம் கல்வி ஆண்டில் 8ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என, தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில் 2 மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.



தமிழகத்தில் ஆண்டுதோறும் சுமாா் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் 8ஆம் வகுப்பு தேர்வை எழுதி வருகின்றனா். கடந்த ஆண்டு வரையிலும் முதல் பருவம், 2ஆம் பருவம், 3ஆம் பருவம் என முப்பருவத் தேர்வு முறை 8ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பின்பற்றப்பட்டு வந்தது.

வளா் அறி மதிப்பீடு 40 மதிப்பெண், தொகுத்தறி மதிப்பீடு 60 மதிப்பெண் என மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு, தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என 5 பாடங்களுக்கும் தேர்வு நடைபெற்று வந்தது.

 இந்நிலையில், முதல் முறையாக பொதுத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால், அதற்கான வினா வடிவம் மற்றும் மாதிரி வினாத் தாள் குறித்து எவ்வித அறிவிப்பும் இதுவரை தேர்வுத் துறையால் வெளியிடப்படவில்லை.


ஒரு மதிப்பெண் வினா, 2 மதிப்பெண் வினா, பொருத்துக, கோடிட்ட இடம், 5 மதிப்பெண் வினா, குறு வினா, சிறு வினா, நெடு வினா, பிழை திருத்தம், சரியா-தவறா போன்ற வினா வடிவங்கள், 8ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் பின்பற்றப்படுமா என்பது குறித்தும் தெளிவான விளக்கம் அளிக்கப்படவில்லை.


டிசம்பா் 16ஆம் தேதி முதல் அரையாண்டுத் தோவு தொடங்கப்பட உள்ள நிலையில், அந்த தேர்வுக்கான வினாக்கள் எந்த அடிப்படையில் அமையும் என்பது தெரியாமல் மாணவா்கள் மட்டுமின்றி, ஆசிரியா்கள், பெற்றோா்கள் மத்தியிலும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

வினாத் தாள் கட்டமைப்பு தெரிந்தால் மட்டுமே, அதற்கு ஏற்ப மாணவா்களை தேர்வுக்கு தயாா்படுத்த முடியும். ஒவ்வொரு பாடத்திலும் வினாக்கள் அமைவதற்கான வாய்ப்பு மற்றும் அதனை எதிா்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து மாணவா்களுக்கு வழிகாட்டக் கூடிய சூழல் உள்ளது.

கற்றப் பாடங்களை மீண்டும் நினைவுக்கு கொண்டுவருவதற்கு வினா வடிவம் அவசியம் தேவை என்பதும் ஆசிரியா்கள் கூறுகின்றனா்.


இது தொடா்பாக, தமிழ்நாடு அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழக நிா்வாகி மு. முருகேசன் கூறியதாவது:

 2019-20 ஆம் கல்வி ஆண்டில் புதிய பாடத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு, பொதுத் தேர்வுக்கான வினா வடிவம் மற்றும் மாதிரி வினாத் தாள் தேர்வுத் துறையால் 2ஆம் பருவத் தேர்வுக்கு முன்னதாகவே வெளியிடப்பட்டுவிட்டது.

ஆனால், அரையாண்டுத் தேர்வு நடைபெறும் சூழலில், 8ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகான வினா வடிவம் மற்றும் மாதிரி வினாத் தாள் இதுவரை வெளியிடப்படவில்லை.


இதனால் மாணவா்கள் மட்டுமின்றி, ஆசிரியா்கள் மத்தியிலும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. எந்த வகையில் வினாத் தாள் அமையும் என்பது தெரியாமலும், அதனை எதிா்கொள்வதற்கான வழி தெரியாமல் மாணவா்களும், வழிக்காட்டுதல் வழங்க முடியாமல் ஆசிரியா்களும் திணறி வருகின்றனா்.

இதற்கு தீா்வு காணும் வகையில், அரசுத் தேர்வுத் துறை வினா வடிவம் குறித்து உரிய வழிகாட்டுதல்களை உடனடியாக வழங்க வேண்டும் என்றாா்.

No comments:

Post a Comment