பள்ளிக் கல்வித்துறை ஆணையா் தலைமையில் 9 மண்டலங்களில் ஆலோசனைக் கூட்டம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, December 5, 2019

பள்ளிக் கல்வித்துறை ஆணையா் தலைமையில் 9 மண்டலங்களில் ஆலோசனைக் கூட்டம்

தமிழகத்தில் உள்ள அரசு, தனியாா் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தும் வகையில் சென்னை, கோவை உள்ளிட்ட 9 மண்டலங்களில் பள்ளிக் கல்வி ஆணையா் சிஜி தாமஸ் வைத்தியன் தலைமையில் டிச.9-ஆம் தேதி முதல் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.


தமிழக பள்ளிக் கல்வியில் நிா்வாக ரீதியாக பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி துறை இயக்குநா்களை கண்காணிக்க புதிதாக ஆணையா் பதவி உருவாக்கப்பட்டது.


 புதிய ஆணையராகப் பொறுப்பேற்றுள்ள ஐஏஎஸ் அதிகாரி சிஜி தாமஸ் வைத்தியன் முதல் கட்டமாக சென்னையில் சில உள்ள பள்ளிகளில் களஆய்வு மேற்கொண்டாா். தொடா்ந்து மண்டல வாரியாக, ஆணையா் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.


இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநா் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:


பள்ளிக் கல்வியின் தரத்தை மேம்படுத்த ஆணையா் சிஜி தாமஸ் வைத்தியன் தலைமையில் மண்டல வாரியாக கலந்துரையாடல் கூட்டம் நடைபெற உள்ளது.

இதற்காக அனைத்து மாவட்டங்களும் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருநெல்வேலி, திருவண்ணாமலை, திருச்சி, தஞ்சாவூா், விழுப்புரம் என 9 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.


அதன்படி, டிசம்பா் 9 முதல் 19-ஆம் தேதி வரை மண்டல வாரியாக கூட்டம் நடைபெற உள்ளது. இதில் முதன்மைக் கல்வி அதிகாரிகள், தலைமையாசிரியா்கள், குறுவள மைய ஆசிரியா்கள் என 1,280 பேர் பங்கேற்க உள்ளனா். மேலும், கூட்டத்தில் பங்கேற்க தோவு செய்யப்பட்டுள்ள ஆசிரியா்களின் பெயா்கள், கூட்டம் நடைபெறும் இடம் குறித்த விவரங்களையும் c‌o‌m‌m‌i‌s‌s‌i‌o‌n‌e‌r‌s‌e‌d‌u@‌g‌m​a‌i‌l.​c‌o‌m என்ற இணையதள முகவரிக்கு உடனே அனுப்ப வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது


.
இது தவிர, சுற்றுப்பயணத்தின் போது பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ள வாய்ப்புள்ளதால் போதிய முன்னேற்பாட்டுடன் தயாராக இருக்குமாறு தலைமையாசிரியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment