நிரந்தர வைப்பு தொகைக்கு 9 சதவீத வட்டி வழங்கும் வங்கிகள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, December 14, 2019

நிரந்தர வைப்பு தொகைக்கு 9 சதவீத வட்டி வழங்கும் வங்கிகள்

இந்தியாவில், மிகவும் பாதுகாப்பான முதலீடாக நிரந்தர வைப்பு தொகை கருதப்படுகிறது. பணம் திரும்பி வருவதற்கான உத்தரவாதமே இதற்கு காரணம். பரஸ்பர நிதியில் முதலீட்டை விட இது பாதுகாப்பானதாக உள்ளது.


 நிரந்தர வைப்பு தொகைக்கு, தங்களது வாடிக்கையாளர், மூத்த குடிமக்களுக்கு, சிறிய நிதிசார்ந்த வங்கிகள் 9 சதவீத வட்டி வழங்குகின்றன. இது, எஸ்பிஐ, எச்டிஎப்சி உள்ளிட்ட பல தனியார் வங்கிகள் வழங்கும் வட்டியை விட அதிகம்.



பின்கேர் சிறு நிதி வங்கி , சூர்யோதய் வங்கிகள், குறிப்பிட்ட காலங்களுக்கு 9 சதவீத வட்டி வழங்குகிறது.பின்கேர் சிறிய நிதி வங்கியானது, 7 நாள் முதல் 7 ஆண்டுகளுக்கான நிரந்தர வைப்பு தொகை திட்டங்களை வழங்குகிறது

ரூ 2 கோடிக்கு குறைவான முதலீடு செய்யப்படும் தொகைகளுக்கு அந்த வங்கி வழங்கும் வட்டி விபரம்:

7 முதல் 90 நாட்களுக்கு : 4 %

91 முதல் 180 நாட்களுக்கு :6 - 7 %

ஒரு வருடம் முதல் 15 மாதம் வரை: 8 %

 15 மாதங்கள் 1 நாள் முதல் 18 மாதங்கள் வரைக்கும் பொருந்தும்)18 மாதங்கள் 1 நாள் முதல் 21 மாதங்கள் வரை: 8.25%

21 மாதங்கள் 1 நாள் முதல் 24 மாதங்கள் வரை: 8.5%


24 மாதங்கள் 1 நாள் முதல் 36 மாதங்கள் வரை: 9%

3 வருடங்கள் 1 நாள் முதல் 5 வருடங்களுக்கு: 8%

5 ஆண்டுகள் 1 நாள் முதல் 7 ஆண்டுகள் வரை: 7 %

மூத்த குடிமக்கள், முதலீடு செய்யும் நிரந்தர வைப்பு தொகைக்கு 7 நாள் முதல் 7 ஆண்டுகளுக்கான வட்டி 4.5 சதவீதம் முதல் 9.5 சதவீதம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

வட்டி விபரம்

7 முதல் 45 நாள் வரை: 4%

46 முதல் 90 நாள் வரை: 4%

91 முதல் 180 நாட்கள் வரை: 6%

181 முதல் 364 நாள்வரை : 7 %

12 முதல் 15 மாதங்கள் வரை: 8%

15 மாதங்கள் ஒரு நாள் - 18 மாதங்கள் வரை: 8%

18 மாதம் ஒரு நாள் - 21 மாதம் வரை : 8.25%

21 மாதம் 1 நாள் - 25 மாதம் வரை: 8.50%

24 மாதம் 1 நாள் - 36 மாதங்கள் வரை: 9 %

3 ஆண்டு 1 நாள் - 5 ஆண்டுகள் வரை: 8%

5 ஆண்டுகள் 1 நாள் - 7 ஆண்டுகள் வரை: 7 % என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

 சூர்யதய் வங்கி சூர்யதய் சிறு நிதி வங்கியில், குறைந்த பட்சம் ரூ.1000 முதல் நிரந்தர வைப்பு தொகை செலுத்தும் வசதி உள்ளது. தங்கள் முதலீட்டிற்கு அதிக வட்டி எதிர்பார்க்கும் முதலீட்டாளர்களுக்கு இது பெரிய பயனுள்ளதாக உள்ளது.

 வாடிக்கையாளர்களுக்கு 7 நாள் முதல் 10 ஆண்டுகள் வரையில், முதலீடு செய்யப்படும் தொகைக்கு 4 சதவீதம் முதல்9 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது.

மூத்த குடிமக்களுக்கு 4.5 சதவீதம் முதல் 9.25 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. 5 ஆண்டுகள் முதலீடு செய்யப்படும் தொகைக்கு 9 சதவீதம் வட்டி வழங்குகிறது.

இந்த வங்கி அளிக்கும் வட்டி விபரம்:


7 முதல் 45 நாட்களுக்கு :4 %

45 முதல் 90 நாள் வரை: 5%

91 நாள் முதல் 6 மாதங்கள் வரை: 5.5%

6 முதல் 9 மாதங்கள் வரை: 7.5 %

9 மாதம் முதல் ஒரு ஆண்டிற்கு: 7.75 %

7 ஆண்டுகள் முதல் 2 ஆண்டுகள் வரைக்கும்: 8.25 %

2 முதல் 3 ஆண்டுகளுக்கு: 8.5 %

3 முதல் 5 ஆண்டுகள் வரைக்கும்: 8 %

5 முதல் 10 ஆண்டுகள் வரைக்கும்: 7.25 %ஈகுயிடாஸ் சிறு நிதி வங்கி மாற்றம் செய்த நிரந்தர வைப்பு தொகைகளுக்கான வட்டி கடந்த 2 ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த வங்கியானது, 888 நாட்களுக்கு முதலீடு செய்யப்படும் தொகைக்கு, ஆண்டுக்கு 8.25 சதவீத வட்டி வழங்குகிறது.

மூத்த குடிமக்களுக்கு 8.85 சதவீத வட்டி வழங்குகிறது.

2 கோடிக்கு கீழ் முதலீடு செய்யப்படும் தொகைக்கான வட்டி விபரம்7 - 14 நாட்கள் - 5 %

15- 29 நாட்கள் 5.5 %

30 -45 நாட்கள் - 6 %

46- 90 நாட்கள் - 6.25 %

91 - 120 மற்றும் 121 -180 நாட்கள் - 6.5 %

181 -321 மற்றும் 211 - 270 நாட்களுக்கு - 6.75 %

271- 364 நாட்கள் : 7.5 %

ஒரு ஆண்டு முதல் 18 மாதம் : 8 %

8 மாதம் 1 நாள் முதல் 2 ஆண்டுகள்: 7.70 %

2 ஆண்டுகள் - 887 நாட்கள் : 7.8%

888 நாட்கள் வரை: 8.25 %

889 நாள் முதல் 3 ஆண்டுகள் வரை : 7.8 % இவ்வாறு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment