அரையாண்டு தேர்வு விடுமுறையில், தேர்தல் சிறப்பு பணி மேற்கொள்ள வேண்டி இருப்பது, அரசு பள்ளி ஆசிரியர்களை கவலையடைய செய்துள்ளது.
தமிழகம் முழுவதும், ஊரக உள்ளாட்சி தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. பல்வேறு பதவிகளுக்காக, தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள், 9ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர்.
தேர்தல் நெருங்கி வருவதால், தேர்தலுக்கான பயிற்சி வகுப்புகள், செயல் விளக்க கூட்டங்கள் உள்ளிட்டவற்றை நடத்துவது குறித்து, தேர்தல் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
ஓட்டுப்பதிவுக்கு உதவி தேர்தல் அதிகாரி, ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர், உதவி அலுவலர் உட்பட பல்வேறு பணிகளில், அரசு அலுவலர்களே நியமிக்கப்படுகின்றனர்.அதிலும், குறிப்பாக, அரசு பள்ளி ஆசிரியர்களே, தேர்தல் பணிகளில் அதிகம் ஈடுபடுத்தப்படுகின்றனர்
.பத்தாம் வகுப்பு, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு, அரையாண்டு தேர்வுகள் இன்று தொடங்குகிறது
வழக்கமாக, தேர்வு முடிந்து ஆசிரியர்களுக்கு விடுமுறை விடப்படும்.அரையாண்டு தேர்வு முடிந்து, ஜன., 2 வரை பள்ளிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநாளில், உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளன. தேர்தல் சிறப்பு பணியில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதால், தேர்வு விடுமுறை இம்முறை ஆசிரியர்களுக்கு கிடையாது. இது ஆசிரியர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

No comments:
Post a Comment