இஸ்ரோ நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள்! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, December 10, 2019

இஸ்ரோ நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள்!

திருநெல்வேலியில் செயல்பட்டு வரும் இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் உந்துவிசை வளாகத்தில் காலியாக உள்ள பல்வேறு தொழில்பழகுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்து பணிக்காக காத்திருக்கும் விருப்பம் உள்ளவர்கள் இளைஞர்கள் டிசம்பர் 14 ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள நேர்முகத் தேர்வில் பங்கேற்று பயனடையவும்.



பட்டப்படிப்பு அளவிலான தொழில்பழகுநர் பயிற்சி:

மொத்த காலியிடங்கள்: 41

பயிற்சி அளிக்கப்படும் இடம்: திருநெல்வேலி

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

1. மெக்கானிக்கல் -10
2. எலக்ட்ரிக்கல் - 05
3. எலக்ட்ரானிக்ஸ் -10
4. இன்ஸ்ட்ருமென்டேசன் - 02
5. கெமிக்கல் - 02
6. கம்ப்யூட்டர் சைன்ஸ் - 05
7. சிவில் - 04
8. நூலக அறிவியல் - 03

தகுதி: பொறியியல் துறையில் சம்பந்தப்பட்ட பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.நூலக அறிவியல் பிரவுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருப்பதுடன் நூலக அறிவியல் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 14.12.2019

பட்டய படிப்பிலான தொழில்பழகுநர் பயிற்சி:

மொத்த காலியிடங்கள்: 59

1. மெக்கானிக்கல் - 20

2. எலக்ட்ரிக்கல் -10
3. எலக்ட்ரானிக்ஸ் -15
4. கெமிக்கல் - 05
5. சிவில் -09

தகுதி: பொறியியல் துறையில் சம்பந்தப்பட்ட பிரிவில் முதல் வகுப்பில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 21.12.2019

ஐடிஐ படிப்பிலான தெழில்பழகுநர் பயிற்சி:

மொத்த காலியிடங்கள்: 120
1. ஃபிட்டர்- 22
2.PASAA/COPA - 45
3. எலக்ட்ரீசியன் - 09
4. வெல்டர்-10
5. டர்னர் - 06
6. எலக்ட்ரானிக் மெக்கானிக் அல்லது ரேடியோ டெலிவிஷன் - 05
7. மெஷினிஸ்ட் - 02
8. டிராப்ட்ஸ்மேன் (மெக்கானிக்) - 02
9. டிராப்ட்ஸ்மேன் (சிவில்) - 04
10. இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக் - 04
11. ஏசி மெக்கானிக் - 04
12. மெக்கானிக் டிசல் - 04
13. கா்ர்பெண்டர் - 02
14. இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக் - 01

தகுதி: சம்மந்த பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 04.01.2020

வயது வரம்பு: மேற்குறிப்பிட்ட மூன்று பணியிடங்களுக்கும் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தேர்வு செய்யுப்படும் முறை: கல்வித் தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.iprc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, அதனைப் பூர்த்தி செய்து நேரடியாக நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி அன்று நேர்முகத் தேர்வில் பங்கேற்கவும்.


மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.iprc.gov.in அல்லது https://www.iprc.gov.in/iprc/index.php/en/Apprentice என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment