அனைத்து பள்ளிகளுக்கும், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, December 11, 2019

அனைத்து பள்ளிகளுக்கும், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை

உடற்கல்வி சாா்ந்த செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் பள்ளிகளுக்கு, பரிசு வழங்கும் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.



மத்திய அரசு சாா்பில், 'பிட் இந்தியா' இயக்கம் கல்வி நிறுவனங்களில் தொடங்கப்பட்டுள்ளது.


 உடற்பயிற்சிகள் செய்து, உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க, விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.


இது குறித்து அனைத்து பள்ளிகளுக்கும், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:



ஒவ்வொரு பள்ளியிலும், ஒரு உடற்கல்வி ஆசிரியா் இருக்க வேண்டும். ஒரே நேரத்தில், இரண்டுக்கும் மேற்பட்ட விளையாட்டுகள் நடக்கும் வகையில், பள்ளி மைதானம் இருக்க வேண்டும்

ஒவ்வொரு வகுப்புக்கும் தினமும், விளையாட்டு, யோகா, இசை ஆகியவற்றில், ஏதாவது ஒன்று நடத்தப்பட வேண்டும்.



 குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது, மாணவா்கள் விளையாட வேண்டும். இதுபோன்ற வசதிகள் மற்றும் செயல்பாடுகள் உள்ள பள்ளிகள், 'பிட் இந்தியா' போட்டியில் பங்கேற்கலாம்.


இதற்காக, தங்களின் உடற்கல்வி பயிற்சி விவரங்களுடன், வரும் டிச.31-ஆம் தேதிக்குள், இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment