இலவச, 'லேப்டாப்' விபரம் தர உத்தரவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, December 15, 2019

இலவச, 'லேப்டாப்' விபரம் தர உத்தரவு

இலவச, 'லேப்டாப்' வழங்கிய விபரத்தை,  தாக்கல் செய்யும்படி, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளி கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.

நடப்பு கல்வி ஆண்டில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு, இலவசமாக, லேப்டாப் கம்ப்யூட்டர் வழங்கப்பட்டுள்ளது. கடந்த கல்வி ஆண்டில், பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, லேப்டாப் வழங்கும் பணி, தற்போது துவங்கி, ஒரு மாதமாக நடந்து வருகிறது



. அதிலும், கடந்த கல்வி ஆண்டில், பிளஸ் 2 முடித்து, கல்லுாரிகள், பாலிடெக்னிக் மற்றும் ஐ.டி.ஐ., கல்வி படித்து கொண்டிருப்பவர்களுக்கு மட்டும், லேப்டாப் வழங்கப்படுகிறது.

படிப்பை கைவிட்டவர்களுக்கு, லேப்டாப் வழங்க வேண்டாம் என, அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், லேப்டாப் வழங்கப்பட்ட விபரங்களை, நாளைக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளி கல்வி துறை இணை இயக்குனர் சுகன்யா உத்தரவிட்டுள்ளார்.



 எனவே, இன்று மாலைக்குள், மாணவர்களுக்கு இலவச லேப்டாப்கள் வழங்கி முடிக்கும்படி, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

No comments:

Post a Comment