அரசு பள்ளிக்கு தினமும் குதிரையில் செல்லும் மாணவன் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, December 11, 2019

அரசு பள்ளிக்கு தினமும் குதிரையில் செல்லும் மாணவன்

மணப்பாறை அருகே அரசுப் பள்ளிக்கு மாணவன் குதிரையில் செல்கிறார். இயற்கை மற்றும் பாரம்பரியத்தை மீட்டெடுக்க 12 வயது சிறுவன் முயற்சி மேற்கொண்டுள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வாடிபட்டியைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியன்.



தனியார் வங்கியில் ஊழியராக பணி புரியும் இவர், இயற்கை விவசாயம் பாரம்பரியமிக்க குதிரை பயணம் போன்ற கலாச்சாரங்களை பள்ளி மாணவர்கள் மற்றும் கிராம பொது மக்களுக்கு ஆலோசனை, பயிற்சிகளை வழங்கி வருகிறார்.


 இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த விவசாயி ஆறுமுகம் மகன் அழகர்சாமி(12) தேனூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வரும் இவர்,

குதிரையை பராமரிப்பதிலும், பயணிக்கவும் ஆர்வம் காட்டி வந்தார்


தற்போது சிறுவன் அழகர்சாமி தினமும் பள்ளிக்கு குதிரையில் பயணித்து வருகிறார்.


மாணவன் குதிரையில் பள்ளிக்கு வருவது ஒட்டுமொத்த மாணவர்கள் மட்டுமல்ல வாகனத்தில் செல்வோரும் வியப்பாக பார்த்து செல்கின்றனர். இயற்கை மற்றும் பாரம்பரியத்தை மீட்டெடுக்க குதிரை சவாரி செய்வதாக மாணவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment