உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு : உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எப்போது? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, December 5, 2019

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு : உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எப்போது?

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கில் வெள்ளி காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்சநீதிமன்ற வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.




தமிழகத்தில் 9 மாவட்டங்களில் வாா்டு மறுசீரமைப்புப் பணிகளை முடித்துவிட்டு உள்ளாட்சித் தோதலை நடத்துவதற்கான அறிவிக்கையை வெளியிடுமாறு தமிழ்நாடு மாநில தோதல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி திமுக சாா்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான அமா்வு முன்பு வியாழன் காலை விசாரணைக்கு வந்தது.




அப்போது புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் மட்டும் தேர்தலை தள்ளிவையுங்கள் என்று தமிழக அரசு சார்பில் கூறப்பட்டது.அதாவது, தொகுதி மறுவரைறை செய்யவில்லை என நினைத்தால் 9 மாவட்டங்களில் மட்டும் தேர்தலை தள்ளிவையுங்கள் என்று தெரிவித்திருந்தது.


இதற்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தேவைப்பட்டால் எங்களால் உள்ளாட்சித் தேர்தலை தள்ளிவைக்க முடியும்
உள்ளாட்சித் தேர்தலை எங்களால் ரத்து செய்ய முடியாது,

 ஆனால் நிறுத்தி வைக்க முடியும். தேர்தல் விதிகள் முறையாக பின்பற்ற முடியவில்லை என்றால், எங்களால் தேர்தலை நிறுத்தி வைக்க முடியும் என்று தெரிவித்தனர்.




அதே சமயம், ஒட்டுமொத்தமாக உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணையையே ரத்து செய்ய வேண்டும் என்று திமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இந்த நிலையில், 9 மாவட்டங்களைத் தவிர பிற இடங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.


பின்னர் மதியம் நடைபெற்ற விசாரணையின் போது தமிழகத்தில் 9 மாவட்டங்களைத் தவிர்த்து பிற இடங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தத் தயார் என்று உச்ச நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்தது.


இதையடுத்து, தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உட்பட 9 மாவட்டங்களைத் தவிர்த்து பிற இடங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் கருத்துக் கூறியது. தொடர்ந்து, வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.


இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கில் வெள்ளி காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்சநீதிமன்ற வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

Source; Dinamani

No comments:

Post a Comment